செய்திகள் மலேசியா
மலாக்கா தேர்தல்; தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி தவிர வேறு எந்தக் கட்சியுடனும் இணைந்து பணியாற்ற நம்பிக்கை கூட்டணி தயாராக உள்ளது: காலித் அப்துல்
அலோர்காஜா:
16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி இணைந்து பணியாற்றாது.
இந்த விவகாரம் நம்பிக்கை கூட்டணியால் முடிவு செய்யப்பட்டுவிட்டது.
இதுவரை தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி தவிர வேறு எந்தக் கட்சியுடனும் இணைந்து பணியாற்ற இந்தக் கூட்டணி தயாராக உள்ளது என்று அமனா தகவல் தொடர்பு இயக்குனர் காலித் அப்துல் சமாத் கூறினார்.
தேசிய முன்னணியுடன் இணைந்து பணியாற்றுவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் நாங்கள் ஏற்க மாட்டோம்.
தேசிய முன்னணி, தேசியக் கூட்டணியுடன் இணைந்து பணியாற்ற விரும்பினால், அது அவர்களின் உரிமை, அவர்கள் விருப்பம்.
தேசியக் கூட்ட்ணியை பொறுத்தவரை, நாங்கள் நிலைநிறுத்தும் கொள்கைகளின் அடிப்படையிலேயே போட்டியிடுவோம் என்று இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
முன்னதாக இரு கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாததைத் தொடர்ந்து, மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துமாறு நம்பிக்கை கூட்டணி தேர்தல் இயக்குனர் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி தேசிய முன்னணியை கேட்டுக்கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 29, 2026, 5:35 pm
1,476 மியன்மார் நாட்டினர் இன்று தாமாக முன்வந்து தாயகம் திரும்பினர்
September 29, 2026, 5:34 pm
நஜிப் வீட்டுக்காவலில் இருக்கும் காலம் தொடங்கும் வரை போக்குவரத்து அமைச்சராக நீடிப்பேன்: அந்தோணி லோக்
September 29, 2026, 4:52 pm
துவாங்கு முஹ்ரிஸை சந்தித்து விட்டு அரண்மனையின் பின் வாசலாக வெளியேறினார் இஸ்மாயில் லாசிம்
September 29, 2026, 3:58 pm
மலேசிய கடப்பிதழ் உலகளவில் 2-வது இடத்திற்கு முன்னேற்றம்
September 29, 2026, 3:35 pm
70 ஆண்டுகளாகத் தனது வாழ்க்கைத் துணையை இழந்ததால் துன் மகாதீர் தனிமையில் வாடுகிறார்: மரினா மகாதீர்
September 29, 2026, 3:34 pm
சொத்துக்களை அறிவிக்காத குற்றச்சாட்டை எதிர்த்து டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி மனு தாக்கல் செய்யவுள்ளார்
September 29, 2026, 3:34 pm
