செய்திகள் மலேசியா
மலேசிய கடப்பிதழ் உலகளவில் 2-வது இடத்திற்கு முன்னேற்றம்
கோலாலம்பூர்
மலேசிய கடப்பிதழ், Passport Index Global Ranking 2026 தரவரிசையில் உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த கடப்பிதழாக முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்த மலேசியா, தற்போது ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மலேசிய குடிநுழைவுத் துறை (JIM), திங்கட்கிழமை சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், இந்த முன்னேற்றம் சர்வதேச அளவில் மலேசிய கடப்பிதழ்க்குள்ள வலிமையையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையையும் பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த தரவரிசையின்படி, மலேசிய கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் மொத்தம் 175 நாடுகள் பயணம் செய்யும் வசதியைப் பெறுகின்றனர். இதில் 129 இடங்களுக்கு விசா தேவையில்லை; 46 இடங்களில் வருகையின்போது விசா பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக தரவரிசையில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முதலிடத்தில் உள்ளது. மலேசியாவும் சிங்கப்பூரும் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில், ஸ்பெயின் மூன்றாவது இடத்தில் உள்ளது.
தென்கிழக்காசிய நாடுகளில், புருனே 18-வது இடத்திலும், திமோர்-லெஸ்தே 45-வது இடத்திலும், தாய்லாந்து 52-வது இடத்திலும், இந்தோனேசியா 55-வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 64-வது இடத்திலும் உள்ளன.
மேலும், வியட்நாம் 71-வது இடத்திலும், கம்போடியா 73-வது இடத்திலும், லாவோஸ் 78-வது இடத்திலும், மியான்மர் 85-வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன. இந்த தரவரிசை சர்வதேச பயணங்களில் மலேசிய பாஸ்போர்ட்டின் அணுகல் நிலையை வெளிப்படுத்துகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 29, 2026, 5:35 pm
1,476 மியன்மார் நாட்டினர் இன்று தாமாக முன்வந்து தாயகம் திரும்பினர்
September 29, 2026, 5:34 pm
நஜிப் வீட்டுக்காவலில் இருக்கும் காலம் தொடங்கும் வரை போக்குவரத்து அமைச்சராக நீடிப்பேன்: அந்தோணி லோக்
September 29, 2026, 4:52 pm
துவாங்கு முஹ்ரிஸை சந்தித்து விட்டு அரண்மனையின் பின் வாசலாக வெளியேறினார் இஸ்மாயில் லாசிம்
September 29, 2026, 3:35 pm
70 ஆண்டுகளாகத் தனது வாழ்க்கைத் துணையை இழந்ததால் துன் மகாதீர் தனிமையில் வாடுகிறார்: மரினா மகாதீர்
September 29, 2026, 3:34 pm
சொத்துக்களை அறிவிக்காத குற்றச்சாட்டை எதிர்த்து டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி மனு தாக்கல் செய்யவுள்ளார்
September 29, 2026, 3:34 pm
