நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொத்துக்களை அறிவிக்காத குற்றச்சாட்டை எதிர்த்து டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி மனு தாக்கல் செய்யவுள்ளார்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீது சுமத்தப்பட்டுள்ள, 14.7 மில்லியன் ரிங்கிட் ரொக்கம், பல மில்லியன் கணக்கான பல்வேறு வெளிநாட்டு நாணயங்கள், ஐந்து தங்கக் கட்டிகள் உள்ளிட்ட சொத்துக்களை அறிவிக்காத குற்றச்சாட்டை எதிர்த்து அவரது தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்யவுள்ளார்.

பெரா நாடாளுமன்ற உறுப்பினரின் வழக்கறிஞரான அமர் ஹம்சா அர்ஷாத், இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தரப்பு பெற்று ஆய்வு செய்த பிறகு மனு தாக்கல் செய்யப்படும்.

நாங்கள் பல சட்ட சிக்கல்களை எழுப்புவோம், நிச்சயமாக குற்றச்சாட்டுகளின் செல்லுபடியாகும் தன்மையையும் செல்லுபடியையும் நாங்கள் கேள்விக்குட்படுத்துவோம்.

அரசுத் தரப்பிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு நாங்கள் மனு தாக்கல் செய்வோம் என்று செஷன்ஸ்  நீதிமன்ற நீதிபதி சுசானா ஹுசைன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறினார்.

முன்னதாக, துணை அரசு வழக்கறிஞர் இபா சிர்ரு சம்சுதின், இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை அரசுத் தரப்பு இன்று தரப்பு வழக்கறிஞரிடம் சமர்ப்பித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009இன் பிரிவு 36-இன் கீழ், பறிமுதல் ஆவணங்கள் மற்றும் இஸ்மாயிலின் சொத்துக்களை அறிவிக்கும் பல ஆவணங்கள் உட்பட ஐந்து தொகுதி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

எனவே, மீதமுள்ள ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் பட்டியலைச் சமர்ப்பிப்பதற்காக, நீதிமன்றம் ஒரு விசாரணைத் தேதியை நிர்ணயிக்க வேண்டும் என்று எங்கள் தரப்பு கோருகிறது என்று அவர் கூறினார்.

தமது தரப்பு ஆவணங்களைப் பெற்றுக்கொண்டதை ஆமெர் உறுதிப்படுத்தினார், ஆனால் இன்னும் சில ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.

முடிந்தால், அடுத்த விசாரணைத் தேதிக்கு முன்னர் மீதமுள்ள ஆவணங்களை எதிர் தரப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று எங்கள் தரப்பு கோருகிறது.

நாங்கள் ஒரு மனுவைத் தாக்கல் செய்யக்கூடும், அதற்கு முன் அந்த ஆவணங்களை நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

பின்னர், இந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றம் டிசம்பர் 4ஆம் தேதியை நிர்ணயித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset