நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துவாங்கு முஹ்ரிஸை சந்தித்து விட்டு அரண்மனையின் பின் வாசலாக வெளியேறினார் இஸ்மாயில் லாசிம் 

சிரம்பான்: 

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீரை இன்று மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் சந்தித்து பேசினார் 

இவர்களின் சந்திப்பு மூன்று மணிநேரமாக நீடித்தது. இந்நிலையில் மந்திரி பெசார் அரண்மனையின் பின்புறமாக வந்த செய்தியானது பேச்சுவார்த்தையில் எந்தவொரு பலனும் இல்லை என்று காட்டுவதாக ஆஸ்ட்ரோ அவானி தெரிவித்துள்ளது 

மேலும், சுங்கை உஜோங், ரெம்பாவ் ஆகிய உண்டாங் வருகையும் இன்று அரண்மனையில் நடைபெற்றது 

நெகிரி செம்பிலானில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடி தொடர்பாக இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

டத்தோ இஸ்மாயில் லாசிம் தற்போதுவரை மாநில மந்திரி பெசாராக இருக்கும் நிலையில் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவிகள் யாவும் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset