நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

70 ஆண்டுகளாகத் தனது வாழ்க்கைத் துணையை இழந்ததால் துன் மகாதீர் தனிமையில் வாடுகிறார்: மரினா மகாதீர்

கோலாலம்பூர்:

துன் டாக்டர் மகாதீர் நலமாக இருக்கிறார். ஆனால் சுமார் 70 ஆண்டுகளாகத் தனது வாழ்க்கைத் துணையை இழந்ததால் அவர் தனிமையில் வாடுகிறார் என்று அவரது மகள் டத்தோ மரினா மகாதீர் கூறினார்.

நேற்று துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலியின் மறைவால் தனது தந்தை இன்னும் துக்கத்தில் இருப்பதாகவும், ஆனால் அவரது தற்போதைய உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

நிச்சயமாக, அப்பா சோகமாக இருக்கிறார். அம்மா  தான் 70 ஆண்டுகளாக அவரது வாழ்க்கைத் துணை. அவர் மிகவும் தனிமையாக உணர்கிறார்.

எனவே, நாங்கள் அனைவரும் இரவும் பகலும் எங்களால் முடிந்தவரை அவருடன் இருக்க முயற்சிக்கிறோம் என்று இன்று இங்குள்ள தேசிய மயானம், பிரசிண்ட்  20-ல் மறைந்த டாக்டர் சித்தி ஹஸ்மாவின் கல்லறையைப் பார்வையிட்ட பிறகு சந்தித்தபோது அவர் கூறினார்.

அவர் காலை 10.40 மணிக்கு வந்து தனது தாயின் கல்லறையில் ஒரு பூங்கொத்தை வைத்தார்.

டாக்டர் சித்தி ஹஸ்மா நேற்று தனது 10ஆவது வயதில் காலமானார்.

காலமானவர் காலை 9.20 மணிக்கு தேசிய இருதய மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை விட்டார். இதனைத் தொடர்ந்து அவரது மகன் டான் ஸ்ரீ மொக்ஸானி, அவரது மறைவுச் செய்தியை உறுதிப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset