நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய குறைந்தபட்ச ஊதிய விகிதம் இறுதி செய்யப்படவில்லை; அமைச்சரவை, பிரதமரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது: டத்தோஶ்ரீ ரமணன்

கோத்தாபாரு:

குறைந்தபட்ச ஊதிய விகிதம் 2,000 ரிங்கிட், 2,100 ரிங்கிட் அல்லது 2,200 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என்ற வதந்திகள் உட்பட, எந்தவொரு புதிய தொகையும் அமைச்சரவை,  பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோரின் ஒப்புதல் பெறும் வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட முடியாது.

புதிய விகிதம் தொடர்பான பரிசீலனை அறிக்கை, அதிகாரப்பூர்வ குறிப்பாணை ஆகியவை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்தார்.

சமீபத்திய விகிதம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ முடிவும் இறுதி செய்யப்படவில்லை. 

சமூக ஊடகங்களில் முன்னர் பரவலாகப் பேசப்பட்ட எந்தவொரு தொகையும் அரசாங்கத்தின் முடிவு அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், அந்தத் தொகை குறித்த யூகங்களின் மூலத்தையும் அவர் கேள்விக்குள்ளாக்கியதோடு, எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கும் அமைச்சரவையின் ஒப்புதலும் பிரதமரின் கருத்துக்களும் தேவை என்றும் வலியுறுத்தினார்.

முன்னதாக, தற்போதுள்ள 1,700 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதிய விகிதம் உயர்த்தப்படும் என்றும், அதன் விவரங்களை அக்டோபர் 9 அன்று 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும் போது பிரதமர் அறிவிப்பார் என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

மக்களவையில் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்வதற்கு முன்னர், குறைந்தபட்ச ஊதிய சரிசெய்தல் குறித்த ஆய்வு தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அன்வர் முன்னதாக உறுதிப்படுத்தினார்.

மிக உயர்ந்த நியாயமான விகிதத்தில் குறைந்தபட்ச ஊதிய உயர்வை தனிப்பட்ட முறையில் தாம் ஆதரிப்பதாகவும், ஆனால் எந்தவொரு தீர்மானமும் ஒரு குறிப்பிட்ட சூத்திரம் மற்றும் பொருளாதார தாக்க ஆய்வின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் டத்தோஶ்ரீ ரமணன் விளக்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset