செய்திகள் மலேசியா
சொத்து விவரங்களை அறிவித்தல்; எம்ஏசிசியுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயார்: டத்தோஸ்ரீ சரவணன்
புத்ராஜெயா:
சொத்து விவரங்களை அறிவித்தல் விவகாரத்தில் எம்ஏசிசியுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயார் என்று முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
கடந்த 2019 முதல் மலேசியா, வெளிநாடுகளில் தான் வைத்துள்ள சொத்துக்கள், அவற்றிற்கான வருமான ஆதாரங்கள் குறித்த விவரங்களை வழங்க தயாராக உள்ளேன்.
மேலும் இன்று காலை எம்ஏசிசி சட்டம் 2009-இன் பிரிவு 36-இன் கீழ் சொத்து விவரங்களை அறிவிப்பதற்கான அறிவிப்பைப் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர்,
இந்த அறிவிப்பு ஒரு வழக்கமான நடைமுறையின் ஒரு பகுதி என்று கூறினார்.
சொத்துக்கள் தனது பெயரிலோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ உள்ளனவா என்பதைத் தீர்மானிப்பது உட்பட, ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அவற்றை விசாரிக்க ஆணையத்திற்கு இது உதவுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
எம்ஏசிசியுடன் ஒத்துழைக்கவும், அவர்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் வழங்கவும் நான் ஒப்புக்கொண்டுள்ளேன்.
இது ஒரு சாதாரண நடைமுறை. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.
யாருக்கேனும் எதிராகக் குற்றச்சாட்டுகள் இருந்தால், அந்த நபரின் சொத்து மதிப்பு வழக்கத்திற்கு மாறானதா என்பதை அவர்கள் இப்படித்தான் விசாரிப்பார்கள்.
அறிவிப்பைப் பெறுவதற்காக மட்டுமே நான் இங்கு வந்திருந்தேன்.
எனது குடும்பத்தினருடன் வந்திருந்தேன் என்று அவர் கூறினார்.
மேலும், தொடர்புடைய தகவல்களை வழங்குவதற்கு எம்ஏசிசி தனக்கு 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மறைப்பதற்கு எதுவும் இல்லாததால், எம்ஏசிசியிடம் தான் சமர்ப்பிக்கும் சொத்து விவரங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தவும் தான் தயாராக உள்ளேன்..
தனது வசம் உள்ள சொத்துக்கள் சட்டப்பூர்வமாகவே பெறப்பட்டவை என்பதை அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 28, 2026, 2:12 pm
1992-ஆம் ஆண்டு தாமஸ் கோப்பை அணிக்கு டாக்டர் ஹஸ்மா ஒரு 'தாய் ஸ்தானத்தில்' திகழ்ந்தார்: ரசிஃப் சிடெக் புகழாரம்
September 28, 2026, 12:46 pm
துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் புத்ராஜயா பிரசிண்ட் 20-ல் அடக்கம் செய்யப்படவுள்ளது
September 28, 2026, 12:27 pm
துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது
September 28, 2026, 12:26 pm
டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு: நாடு ஒரு ரத்தினத்தை இழந்து விட்டது
September 28, 2026, 11:51 am
சித்தி ஹஸ்மாவின் மறைவு சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஒரு பெரும் இழப்பு: பிரதமர்
September 28, 2026, 11:41 am
சித்தி ஹஸ்மாவின் மறைவுக்கு மாமன்னர், அரசியார் இரங்கல் தெரிவித்துள்ளனர்
September 28, 2026, 10:37 am
என் 12 வயது மகனை ஏன் இதில் சம்பந்தப்படுத்த வேண்டும்?: டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி
September 28, 2026, 10:36 am
துன் சித்தி ஹஸ்மா தனது 100ஆவது வயதில் காலமானார்
September 27, 2026, 10:54 pm
