செய்திகள் மலேசியா
தஞ்சோங் ரம்புத்தான் குருவிமலை, மகா காளியம்மன் ஏழு கன்னிகள் ஆலயத்திற்கு நில விவகாரம்; தவறான தகவல்களை சித்தரிக்க வேண்டாம்: ஆலய நிர்வாகம்
ஈப்போ:
குருவிமலை மகா காளியம்மன், ஏழு கன்னிகள் ஆலயம் 80 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த ஆலயமாக விளங்கி வரும் நிலையில், தற்போது ஆலயத்திற்காக முறையாக 0.8 ஏக்கர் நிலம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இதில் பிரச்சினை இருப்பதாக சித்தரிக்க வேண்டாம் ஆலயத் தலைவர் பாக்கியநாதன் கேட்டுக்கொண்டார்.
பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசனின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பலனாக, ஆலயத்திற்கான 0.8 ஏக்கர் நிலம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.
ஆலயம் அமைந்துள்ள பகுதியில் பள்ளி, கணேசர் ஆலயம், தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளது.
மேலும் அப்பகுதியில் வசிக்கும் மூவின மக்களும் நீண்டகாலமாக எவ்விதப் பிரச்சினையுமின்றி ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்ந மகா காளியம்மன் ஏழு கன்னிகள் ஆலயத்தில் ஏதேனும் பிரச்சினை இருப்பதைப் போன்ற தோற்றத்தை சிலர் ஏற்படுத்துவது வருத்தமளிப்பதாக குறிப்பிட்ட அவர்,
ஆலயத்தில் தற்போது எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்றும், அனைத்து நடவடிக்கைகளும் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் தெளிவுபடுத்தினார்.
ஆலயத்திற்குத் தேவையான பணிகள் அனைத்தும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, டிக்டாக் போன்ற தளங்களில் ஆலயத்தில் பிரச்சினை இருப்பதைப் போன்ற தகவல்களையோ காணொளிகளையோ வெளியிட்டு தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 28, 2026, 6:16 pm
தேசிய நினைவிடத்தில் எண்டோன் கல்லறைக்கு அருகில் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் அடக்கம் செய்யப்படும்: ஃபஹ்மி
September 28, 2026, 6:15 pm
மறைந்த துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவுக்கு டத்தோஸ்ரீ அன்வாரும், வான் அஜிஸாவும் இறுதி அஞ்சலி செலுத்தினர்
September 28, 2026, 5:48 pm
சித்தி ஹஸ்மாவின் உடல் நல்லடக்கத்திற்காகத் தேசிய நினைவிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது
September 28, 2026, 5:26 pm
உறவுகள் சுமூகமாக இல்லையென்றாலும் மடானி அரசாங்கத்தை தேசிய முன்னணி ஆதரிக்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
September 28, 2026, 2:12 pm
1992-ஆம் ஆண்டு தாமஸ் கோப்பை அணிக்கு டாக்டர் ஹஸ்மா ஒரு 'தாய் ஸ்தானத்தில்' திகழ்ந்தார்: ரசிஃப் சிடெக் புகழாரம்
September 28, 2026, 12:55 pm
சொத்து விவரங்களை அறிவித்தல்; எம்ஏசிசியுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயார்: டத்தோஸ்ரீ சரவணன்
September 28, 2026, 12:46 pm
துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் புத்ராஜயா பிரசிண்ட் 20-ல் அடக்கம் செய்யப்படவுள்ளது
September 28, 2026, 12:27 pm
துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது
September 28, 2026, 12:26 pm
