செய்திகள் மலேசியா
துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது
கோலாலம்பூர்:
துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இன்று காலை 9.20 மணிக்கு துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலி இறந்துவிட்டதாக உறுதிசெய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இன்று காலை சுமார் 10.40 மணியளவில் அவரது உடல் தேசிய இருதய மருத்துவமனையில்யில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டது.
காலை 10.35 மணிக்கு துன் டாக்டர் மகாதீர் முகமது மருத்துவமனையிலிருந்து வெளியேறிய சுமார் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, இறந்தவரின் உடலை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் ஒரு ஆம்புலன்ஸ் ஐஜேஎன் பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டது.
பல வாகனங்கள் அந்த ஆம்புலன்ஸைப் பின்தொடர்ந்தன.
மேலதிக ஏற்பாடுகளுக்கு முன்பு குளிப்பாட்டுவதற்காக, இறந்தவரின் உடல் செரி கெம்பங்கனில் உள்ள தி மைன்ஸ் என்ற இடத்தில் உள்ள குடும்ப வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது என் நம்பப்படுகிறது.
இறுதிச் சடங்கு பிரார்த்தனை, அடக்கம் செய்யப்படும் இடம் உள்ளிட்ட இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் குறித்து, இறந்த டாக்டர் சித்தி ஹஸ்மாவின் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 28, 2026, 12:55 pm
சொத்து விவரங்களை அறிவித்தல்; எம்ஏசிசியுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயார்: டத்தோஸ்ரீ சரவணன்
September 28, 2026, 12:46 pm
துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் புத்ராஜயா பிரசிண்ட் 20-ல் அடக்கம் செய்யப்படவுள்ளது
September 28, 2026, 12:26 pm
டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு: நாடு ஒரு ரத்தினத்தை இழந்து விட்டது
September 28, 2026, 11:51 am
சித்தி ஹஸ்மாவின் மறைவு சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஒரு பெரும் இழப்பு: பிரதமர்
September 28, 2026, 11:41 am
சித்தி ஹஸ்மாவின் மறைவுக்கு மாமன்னர், அரசியார் இரங்கல் தெரிவித்துள்ளனர்
September 28, 2026, 10:37 am
என் 12 வயது மகனை ஏன் இதில் சம்பந்தப்படுத்த வேண்டும்?: டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி
September 28, 2026, 10:36 am
துன் சித்தி ஹஸ்மா தனது 100ஆவது வயதில் காலமானார்
September 27, 2026, 10:54 pm
