நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவா்களில் ஒருவரான திலீபன் சிலையை இலங்கை போலிசார் அகற்றினர் 

யாழ்ப்பாணம்:

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள நல்லூரில் நிறுவப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவா்களில் ஒருவரான திலீபனின் வெண்கலச் சிலையை அந்த நாட்டு காவல் துறை ஞாயிற்றுக்கிழமை அகற்றியது.

தடை செய்யப்பட்ட அமைப்பைச் சோ்ந்த ஒருவரின் சிலைக்கு மரியாதை செலுத்தப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்தச் சிலை அகற்றப்பட்டதாக காவல் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த அமைப்புக்கு தடை உள்ளது. 

திலீபன் என்று பரவலாக அறியப்படும் ராசையா பாா்த்திபன்,  தமிழா் உரிமைகளை வலியுறுத்தி, நல்லூரில் கடந்த 1987, செப்டம்பா் 18-ஆம் தேதிமுதல் 10 நாள்கள் தொடா்ந்து உண்ணாவிரதம் இருந்த அவா், 26-ஆம் தேதி மரணமடைந்தாா்.

அவரை நினைவுகூரும் விழா, நல்லூரில் உள்ள திலீபன் நினைவு சதுக்கத்தில் செப். 18-ஆம் தேதி தொடங்கியது. கடந்த காலங்களிலும் திலீபன் சிலை அரசுப் படைகளால் பலமுறை சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset