செய்திகள் மலேசியா
துன் சித்தி ஹஸ்மா தனது 100ஆவது வயதில் காலமானார்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் மனைவியான துன் டாக்டர் ஹஸ்மா அலி, இன்று தனது 100ஆவது வயதில் காலமானார்.
தேசிய இதய மருத்துவமனையில் காலை சுமார் 9.20 மணியளவில் அவர் உயிர் நீத்ததாகத் தெரியவருகிறது.
பிரதமரின் மனைவி என்ற தனது பதவியைப் பயன்படுத்தி, தாய்மார்களின் ஆரோக்கியம், குடும்பக் கட்டுப்பாடு, எழுத்தறிவு, போதைப்பொருள் தடுப்பு, மனநலம் ஆகியவற்றை முன்னெடுத்த ஒரு மருத்துவராகவும் ஹஸ்மா விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் மனைவி என்ற தனது பதவியைப் பயன்படுத்தி, தாய்மார்களின் ஆரோக்கியம், குடும்பக் கட்டுப்பாடு, எழுத்தறிவு, போதைப்பொருள் தடுப்பு, மனநலம் ஆகியவற்றை முன்னெடுத்த ஒரு மருத்துவராகவும் ஹஸ்மா விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1926-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான் (Klang) நகரில் பிறந்த சித்தி ஹஸ்மா, மலேசியாவின் ஆரம்பகால மலாய் இனப் பெண் மருத்துவர்களில் ஒருவராகத் திகழ்ந்ததுடன், மருத்துவம், பொது சுகாதாரம் , சமூகப் பணி ஆகிய துறைகளில் நீண்ட காலப் பணியாற்றியுள்ளார்.
இவர் சிங்கப்பூரில் உள்ள கிங் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று, 1955-இல் பட்டம் பெற்றார்.
சுகாதார அமைச்சில் இணைந்த பிறகு, கெடா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றிய இவர், குறிப்பாகப் பொது சுகாதாரம், தாய்-சேய் நலப் பராமரிப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தினார்.
சித்தி ஹஸ்மா 1956-ஆம் ஆண்டில் மகாதீர் முஹம்மதை மணந்தார்.
இத்தம்பதியினருக்கு ஏழு குழந்தைகள் உள்ளனர்; இவர்களில் சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான மரினா மகாதீர், கெடா மாநிலத்தின் முன்னாள் மெந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் ஆகியோரும் அடங்குவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 28, 2026, 11:51 am
சித்தி ஹஸ்மாவின் மறைவு சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஒரு பெரும் இழப்பு: பிரதமர்
September 28, 2026, 11:41 am
சித்தி ஹஸ்மாவின் மறைவுக்கு மாமன்னர், அரசியார் இரங்கல் தெரிவித்துள்ளனர்
September 28, 2026, 10:37 am
என் 12 வயது மகனை ஏன் இதில் சம்பந்தப்படுத்த வேண்டும்?: டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி
September 27, 2026, 10:54 pm
யூஐடிஎம் ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட பல்கலைக்கழக ஹோல்டிங் நிறுவனங்களை உயர் கல்வியமைச்சு ஆய்வு செய்கிறது: ஜம்ரி
September 27, 2026, 8:36 pm
பேங்காக்கில் உள்ள மலேசியர்கள் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்துகிறது
September 27, 2026, 3:12 pm
நஜிப்பின் வீட்டுக் காவல்; அபராதம் செலுத்த உதவும் நிதித் திரட்டல் 9.25 மில்லியன் ரிங்கிட்டை எட்டியது: ஜாஹித்
September 27, 2026, 3:10 pm
