நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சித்தி ஹஸ்மாவின் மறைவுக்கு மாமன்னர், அரசியார் இரங்கல் தெரிவித்துள்ளனர்

கோலாலம்பூர்:

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்,  ராஜா பெர்மைசூரி அகோங் ராஜா ஸரித் சோஃபியா ஆகியோர் டாக்டர் சித்தி ஹஸ்மா அலியின் மறைவுக்குத் தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர்.

சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் முகநூல் பதிவின் மூலம் மன்னர் அவர்கள், 

காலமானவர் இறைவனின் ஆசீர்வாதங்களால் நிரப்பப்பட்டு, விசுவாசிகள் மற்றும் நீதிமான்களுடன் சேர்க்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.

மேலும், காலமானவரின் குடும்பத்தினர் அனைவரும் தங்கள் அன்புக்குரியவரின் இழப்பை எதிர்கொள்ள வலிமை, மன உறுதி மற்றும் பொறுமையைப் பெற வேண்டும் என்றும் மாமன்னர் பிரார்த்தனை செய்தார்.

முன்னதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மதுவின் மனைவி ஹஸ்மா, இன்று காலை தேசிய இருதய மருத்துவமனையில்  காலமானார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset