செய்திகள் மலேசியா
யூஐடிஎம் ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட பல்கலைக்கழக ஹோல்டிங் நிறுவனங்களை உயர் கல்வியமைச்சு ஆய்வு செய்கிறது: ஜம்ரி
அஸ்தானா:
யூஐடிஎம் ஹோல்டிங்ஸ் உட்பட, பொதுப் பல்கலைக்கழக ஹோல்டிங் நிறுவனங்களை ஆய்வு செய்து மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளை உயர்கல்வி அமைச்சு கடந்த ஆண்டு முதல் தொடங்கியுள்ளது.
உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதிர் இதனை கூறினார்.
2017ஆம் ஆண்டு முதல் அரசாங்கம் பல்கலைக்கழகங்களின் நிதித் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யாத நிலையில், பல்கலைக்கழக ஹோல்டிங் நிறுவனங்கள் மிகவும் திறம்படச் செயல்படுவதையும், அந்தந்த நிறுவனங்களுக்குப் பங்களிப்பதையும் உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து ஹோல்டிங் நிறுவனங்களையும் ஆய்வு செய்ய நாங்கள் கோரியுள்ளோம்.
கடந்த ஆண்டு முதல், பல்கலைக்கழகங்களில் உள்ள ஹோல்டிங் நிறுவனங்களின் நிலையை எவ்வாறு மறுசீரமைப்பது என்பதைப் பார்க்குமாறு நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.
சரியாகச் செயல்படாத சில நிறுவனங்களும் உள்ளன என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
அதுவே நாங்கள் எடுத்துள்ள முதல் படியாகும். மேலும், யூஐடிஎம் ஹோல்டிங்ஸ் உட்பட அந்த நிறுவனங்களை ஆய்வு செய்வதற்காக, நாங்கள் ஏற்கனவே தொடர் ஆய்வுகளைத் தொடங்கிவிட்டோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 27, 2026, 8:36 pm
பேங்காக்கில் உள்ள மலேசியர்கள் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்துகிறது
September 27, 2026, 3:12 pm
நஜிப்பின் வீட்டுக் காவல்; அபராதம் செலுத்த உதவும் நிதித் திரட்டல் 9.25 மில்லியன் ரிங்கிட்டை எட்டியது: ஜாஹித்
September 27, 2026, 3:10 pm
15ஆவது நாடாளுமன்றம் கலைக்கும் வரை தான் ஒருமைப்பாட்டு அரசுக்கு ஆதரவு: ஜாஹித்
September 27, 2026, 1:03 pm
மடானி அரசாங்கத்தில் இருந்து தேசிய முன்னணி உடனடியாக வெளியேற வேண்டும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
September 27, 2026, 11:26 am
நஜிப்பின் நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பு: ஊழலை ஒழிக்கும் கொள்கையை டத்தோஸ்ரீ அன்வார் உறுதியாக ஆதரிக்கிறார்
September 27, 2026, 10:32 am
