நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

என் 12 வயது மகனை ஏன் இதில் சம்பந்தப்படுத்த வேண்டும்?: டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி

கோலாலம்பூர்:

முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன், எம்ஏசிசி இன்று காலை தனது 12 வயது மகனுக்கு சொத்து விவர அறிவிப்பு நோட்டீஸை வழங்குவதற்காக அவரை ஆணையத்தின் தலைமையகத்திற்கு வரவழைத்ததாகக் கூறினார்.

மகனின் தந்தை என்ற முறையில் அந்த நோட்டீஸ் தனக்கும் வழங்கப்படலாம் என்று கூறினார்.

ஒரு 12 வயது சிறுவன் ஏன் தனியாக ஆஜராக வேண்டும்? ஒரு குழந்தையை ஏன் மன அழுத்தமும் கவலையும் நிறைந்த சூழ்நிலையில் வைக்க வேண்டும்? என்று கூறிய அவர், இன்று காலை எம்ஏசிசி தலைமையகத்தில் ஆஜராவதாகவும் தெரிவித்தார்.

தனது மகன் அந்த அமைப்பின் தலைமையகத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது, ​​எம்ஏசிசி விவேகத்துடன் செயல்பட்டதா, போதுமான உணர்திறனைக் கருத்தில் கொண்டதா என்றும் மஇகா துணைத் தலைவருமான அவர் கேள்வி எழுப்பினார்.

பிள்ளையின் பெயரில் சொத்து பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வது மட்டுமே நோக்கம் என்றால், அந்தத் தகவலைப் பெற்றோர்கள் அல்லது உரிய பிரதிநிதிகள் மூலம் ஏன் வழங்க முடியாது?

விசாரணையில் உள்ள நபர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்கு எம்ஏசிசி பரந்த அதிகாரங்கள் உள்ளன என்பதை டத்தோஸ்ரீ சரவணன் ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், குறிப்பாகக் பிள்ளைகள் சம்பந்தப்பட்டிருக்கும்போது, ​​விவேகத்தையும் உணர்திறனையும் கருத்தில் கொள்ளாமல் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset