நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் வீட்டுக் காவல்; அபராதம் செலுத்த உதவும் நிதித் திரட்டல் 9.25 மில்லியன் ரிங்கிட்டை எட்டியது: ஜாஹித்

கோலாலம்பூர்:

டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தனது தண்டனையின் மீதமுள்ள காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கான நிபந்தனையாக விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துவதற்கு உதவும் நிதித் திரட்டல் தற்போது 9.25 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.

இன்று காலை 10 மணி நிலவரப்படி இந்தத் தொகை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்கு இது இன்னும் போதுமானதாக இல்லை என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.

தற்போதைய நிலவரப்படி, 9.25 மில்லியன் ரிங்கிட் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் 50 மில்லியன் ரிங்கிட் என்ற இலக்கை அடைய இது இன்னும் போதுமானதாக இல்லை.

நிதி வசூலை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மன்னிப்பு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை எட்டுவதற்கு, வரும் காலத்தில் நண்பர்கள் உதவ முடியும் என நம்புகிறோம்.

வீட்டுக் காவலை முழுமையாக அமல்படுத்துவதற்கு முன்பு இந்தத் தொகை செலுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset