நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேங்காக்கில் உள்ள மலேசியர்கள் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்துகிறது

பேங்காக்:

பேங்காக்கில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அங்குள்ள மலேசியர்கள் உதவிகளுக்காகவும்  தகவல்களுக்காகவும்  தொடர்பில் இருக்குமாறு மலேசியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டு வருவதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், தூதரக உதவி தேவைப்படுபவர்களுக்கான தொடர்புத் தகவல்களையும் பகிர்ந்துள்ளது.

மலேசியர்கள் இ-கான்சுலர் (e-Konsular) அமைப்பு மூலம் பதிவு செய்யவும், உள்ளூர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெள்ளத்தால் ஏற்படக்கூடிய வழித்தடத் தாமதங்கள் காரணமாக, சுவர்ணபூமி விமான நிலையத்திற்குப் பயணிப்பவர்கள் கூடுதல் பயண நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி தாய்லந்தின் 21 மாநிலங்களில் வெள்ளம் நீடிக்கிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset