நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலானில் நிலவும் நெருக்கடியைத் தீர்க்கும் முயற்சிகளுக்கு இணங்க, தேசிய முன்னணி இன்று இரவு கூடுகிறது: ஜாஹித் ஹமிடி

கோலாலம்பூர்:

தேசிய முன்னணி இன்று இரவு தேசிய முன்னணி தலைமையகத்தில் 25 நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளது.

அம்னோ தலைவரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

தற்போது நெகிரி செம்பிலான் எதிர்கொள்ளும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இருப்பினும், இந்தக் கூட்டம் தலையிடும் நோக்கம் கொண்டதல்ல.

மாறாக, தற்போது நெகிரி செம்பிலான் எதிர்கொள்ளும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான சிறந்த வழியைக் கண்டறியவே நாங்கள் விரும்புகிறோம்.

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற மக்கள் சக்தி கட்சியின் 18ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடங்கி வைத்த பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
இந்த நெருக்கடி குறித்து மேலும் கருத்து தெரிவித்த டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித்,
மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்காக 25 தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தற்போதுள்ள பழக்கவழக்கங்கள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் மாநில அளவிலேயே ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset