நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

15ஆவது நாடாளுமன்றம் கலைக்கும் வரை தான் ஒருமைப்பாட்டு அரசுக்கு ஆதரவு: ஜாஹித்

கோலாலம்பூர்:

நாட்டின் 15ஆவது நாடாளுமன்றம் கலைக்கும் வரை தான் ஒருமைப்பாட்டு அரசுக்கு ஆதரவு.

அதன் பின் தேசிய முன்னணியின் அரசியல் முடிவு வேறு பாதையில் இருக்கும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.


கடந்த தேர்தலுக்கு பின் நாட்டில் நிலைத் தன்மையான அரசாங்கம் அமைய வேண்டும் என்ற நோக்கில் தேசிய முன்னணி ஒருமைப்பாட்டு அரசாங்கத்திற்கு ஆதரவு தந்தது.

அதற்காக இன்றைய அரசியல் சூழ்நிலையிலும் ஒருமைப்பாட்டு அரசாங்கத்துடன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

குறிப்பாக மத்திய அரசாங்கத்துடனான நிலைபாடு வேறு. மாநில அரசாங்கத்துடனான நிலைபாடு வேறு.

இதனை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

அதன் அடிப்படையில் மாமன்னருக்கு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் 15ஆவது நாடாளுமன்றம் கலைக்கும் வரை தான் ஒருமைப்பாட்டு அரசாங்கத்திற்கு ஆதரவு.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் தேசிய முன்னணி முடிவு வேறாக இருக்கும்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய டத்தோஸ்ரீ ஜாஹித் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset