நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி அரசாங்கத்தில் இருந்து தேசிய முன்னணி உடனடியாக வெளியேற வேண்டும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்

கோலாலம்பூர்:

மடானி அரசாங்கத்தில் இருந்து தேசிய முன்னணி  உடனடியாக வெளியேற வேண்டும்.

லேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் இதனை வலியுறுத்தினார்.


கடந்த பொதுத் தேர்தலுக்கு பின் நாட்டில் அரசியல் நிலைத் தன்மை ஏற்படும் நோக்கில் தேசிய முன்னணி, ஒருமைப்பாட்டு அரசாங்கத்திற்கு ஆதரவு தந்தது.

ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் தேசிய முன்னணியின் ஆதரவு தவறான முடிவாக மாறி வருகிறது.

தேசிய முன்னணிக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைப்பது இல்லை.

குறிப்பாக தேசிய முன்னணியில் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டு வருகிறது.

ஆகையால் மடானி அரசாங்கத்தில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 18ஆவது பேராளர் மாநாட்டில் பேசிய டத்தோஸ்ரீ தனேந்திரன் இவ்வாறு வலியுறுத்தினார்.

இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் காலத்தில் புளுபிரிண்ட் ஒன்று தயார் செய்யப்பட்டது.

கிடப்பில் போடப்பட்ட இந்த புளுபிரிண்ட் உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

மேலும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு வழங்கப்பட்ட வீட்டுக்காவல் மன்னிப்பு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்விவகாரத்தில் அவருக்கு அநீதி இழைக்கப்படக்கூடாது என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset