நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பு: ஊழலை ஒழிக்கும் கொள்கையை டத்தோஸ்ரீ அன்வார் உறுதியாக ஆதரிக்கிறார்

பாங்கி:

நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட வழக்கில், கூட்டரசு அரசியலமைப்பின் சாரத்தையும், மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் முடிவையும் தமது அரசாங்கம் பின்பற்றுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

சட்டம், விதிமுறைகள், தேசிய நலன்களின் அடிப்படையில் தனது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதிலிருந்து இது தன்னைத் தடுக்காது.

ஊழல் நடைமுறைகளையோ அல்லது தனிப்பட்ட ஆதாயத்திற்காக தேசிய செல்வத்தை அபகரிக்கும் செயல்களையோ நாடு பொறுத்துக்கொள்ளாது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பது தெளிவாக உள்ளது என்று அவர் கூறினார்.

நஜிப் வழக்கைச் சுற்றியுள்ள சர்ச்சையைப் பற்றி நாம் விவாதிக்கும்போது, ​கூட்டரசு அரசியலமைப்பு சாராம்சத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால், உதாரணமாக, ஒரு பிரதமர் சட்டத்தின் அடிப்படையில் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதை அது தடுக்காது.

நாம் என்ன தெரிவிக்க விரும்புகிறோம்? இந்த நாடு ஊழலையும், தேசிய நிதிகளை 'சகாவ்' நடைமுறையையும் பொறுத்துக்கொள்ளாது என்று அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset