நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசாவில் நிலவும் சூழ்நிலையின் தோல்வியால் மலேசியா சோர்வடைந்துள்ளது: முஹம்மது ஹசான்

நியூயார்க்:

பாலஸ்தீனிய மக்களின் துன்பங்கள் தொடர்வதால், சர்வதேச சமூகம் தனது பதில் நடவடிக்கைகளைச் செயல்படுத்த காசாவை விட அவசரமான இடம் வேறு இல்லை என்று மலேசியா வலியுறுத்தியது.

பல உறுப்பு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு நீதி கோரியுள்ளன.

ஆனால் இந்த கூட்டு விருப்பம் வீட்டோ அதிகாரத்தால் தொடர்ந்து தடைபடுகிறது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மது ஹசான் கூறினார்.

மலேசியா வெளிப்படையாகக் கூறுகிறது, நாங்கள் இதனால் சோர்வடைந்து விட்டோம் என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற 81ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் பொது விவாதத்தில் தேசிய அறிக்கையை வழங்கும்போது கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் போரின் பின்விளைவுகளைக் கையாள்வதற்காக மட்டுமல்ல, போர் நடப்பதைத் தடுப்பதற்காகவும் நிறுவப்பட்டது.

ஆனால், பல சமயங்களில் பேரழிவு நிகழ்ந்த பின்னரே நாம் செயல்படுகிறோம். 
உயிரிழப்புகளைக் கணக்கிடுகிறோம். பொருட்களை அனுப்புகிறோம். 

அழிக்கப்பட்டதை மீண்டும் கட்டியெழுப்புகிறோம். பிறகு அடுத்த நெருக்கடிக்காகக் காத்திருக்கிறோம்.

எனவே, பலதரப்பு ஒத்துழைப்பின் எதிர்காலம், பேரழிவுக்குப் பதிலளிப்பதிலிருந்து தடுப்பதை நோக்கி மாற வேண்டும் என்று மலேசியா வலியுறுத்தியதாக டத்தோஸ்ரீ முஹம்மது ஹசான் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset