நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் நினைவு தபால்தலை வெளியீடு; டான்ஸ்ரீ  மாணிக்கவாசகம் போன்ற உன்னத தலைவர்களை மக்கள் நினைவுக்கூர வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

டான்ஸ்ரீ  மாணிக்கவாசகம் போன்ற உன்னத தலைவர்களை மக்கள் நினைவுக்கூர வேண்டும்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் மஇகாவைத் தோற்றுவித்த முன்னோடிகளில் ஒருவராகவும், 18 ஆண்டுகள் தேசியத் துணைத் தலைவராகவும், 6 ஆண்டுகள் தேசியத் தலைவராகவும் அளப்பரிய சேவையை வழங்கியுள்ளார்.

அவரின்  நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், அவரைப் போற்றும் வகையில் சிறப்பு நினைவுத் தபால்தலை இன்று வெளியிடப்பட்டது.

இந்த தபால் தலையை  மஇகாவின் தலைவர்  டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்  வெளியிட்டது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.

சொக்சோவைத் தோற்றுவித்தவர், மஇகாவின் கல்வி நிதியைத் தோற்றுவித்தவர் என பல்வேறு புகழுக்குச் சொந்தக்காரர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம்.

நமது தலைவர்களின் தியாகங்களும் சாதனைகளும் வருங்காலத் தலைமுறைக்கு ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

இதன் தொடக்கப் புள்ளியாகவே இந்த நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

வரும் அக்டோபர் 4ஆம் தேதி மதியம் 2.00 மணிக்கு ஜாலான் ஈப்போ தண்டாயுதபாணி செட்டியார் மண்டபத்தில், டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூற்றாண்டு விழா, அவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய நூல் வெளியீடும் இடம்பெறும்.

இதில் அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டும்.

இதன் மூலம் டான்ஸ்ரீ  மாணிக்கவாசகம் போன்ற உன்னத தலைவர்களை மக்கள் நினைவுக்கூர வேண்டும் என்று  டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset