நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவின் கல்வி, தொழில் திறன், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் தூரநோக்கு சிந்தனையும் முக்கிய காரணம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

மஇகாவின் கல்வி, தொழில் திறன், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அதன் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் தூரநோக்கு சிந்தனையும் முக்கிய காரணம்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.


டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.

இம்முயற்சியை மேற்கொண்ட கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் தலைமையிலான குழுவினருக்கு எனது பாராட்டுகள்.


மேலும் இன்றைய நிகழ்ச்சி எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.

காரணம் என் அப்பாவின் வளர்ச்சிக்கு டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் முக்கிய பங்கை ஆற்றியுள்ளார்.

மேலும் மஇகாவின் கல்வி, தொழில் திறன், பொருளாதாரத் திட்டங்களுக்கு டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் தூரநோக்கு சிந்தனையும் முக்கிய காரணமாக உள்ளது.

அதன் அடிப்படையில் இன்று அவரின் சாதனைகளை அங்கீகரிக்கும் நோக்கில் தபால் தலை வெளியிட்டது மிகவும் பெருமையாக உள்ளது.

மேலும் வரும் அக்டோபர் 4ஆம் தேதி டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் நூற்றாண்டு விழா, அவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய நூல் வெளியீடப்படவுள்ளது.

இந்த நூலை ஒவ்வொரு மலேசிய இந்தியர்களும் படிக்க வேண்டும். இது தான் எனது வேண்டுகோள் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset