செய்திகள் மலேசியா
ஹவானா காசே உதவித் திட்டத்தின் வாயிலாக 153 தமிழ் ஊடகவியலாளர்கள் பயனடைந்துள்ளனர்: தியோ
கோலாலம்பூர்:
ஊடகவியலாளர்களுக்கான ஹவானா காசே உதவித் திட்டத்தின் வாயிலாக கிட்டத்தட்ட 153 தமிழ் ஊடகவியலாளர்கள் பயனடைந்துள்ளனர்.
தகவல் தொடர்பு துறை துணையமைச்சர் தியோ நிங் சிங் இதனை கூறினார்.
தேசிய ஊடகவியலாளர்கள் தினத்தை முன்னிட்டு மடானி அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கான ஹவானா காசே திட்டம் அறிமுகம் செய்தது.
இத்திட்டத்தின் வாயிலாக இதுவரை மொத்தமாக 850 ஊடகவியலாளர்கள் பயன் பெற்றனர்.
நாடு முழுவதும் உள்ள ஊடகவியலாளர்களுக்கு 2.5 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 153 தமிழ் ஊடகவியலாளர்களும் அடங்குவர். அவர்களுக்கு 460,000 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் தான் இதன் வாயிலாக பயன் பெற்றுள்ளனர்.
அரசாங்கம் தமிழ் ஊடகவியலாளர்களின் நலனுக்கும் முன்னுரிமை விளங்குகிறது என்பது இது காட்டுகிறது.
இப்படி தமிழ் ஊடகவியலாளர்களின் நலனுக்கு அரசாங்கம் என்றுமே கவனம் செலுத்தும்.
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசிய துணையமைச்சர் தியோ நிங் சிங் இவ்வாறு கூறினார்.
தகவல் தொடர்பு அமைச்சின் கீழ் ஊடகப் புத்தாக்க நிதிக்கு 30 மில்லியன் ஒதுக்கப்பட்டது.
இந்நிதிக்கும் தமிழ் ஊடகங்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று துணையமைச்சர் தியோ கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 26, 2026, 2:14 pm
ஊடகங்கள் செய்தியை மட்டும் பதிவு செய்வதில்லை; ஒரு சமூகத்தின் வரலாற்றையே பதிவு செய்கிறது: சிவமலர்
September 26, 2026, 1:29 pm
மலாக்கா மாநில தேர்தல்: பெரிக்காத்தான் நேஷனல் - பாரிசான் நேஷனல் இடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது
September 26, 2026, 1:28 pm
மலாக்கா தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தினத்திற்கு முன்பு பாரிசான் நேஷனல் அதன் வேட்பாளர்களை அறிவிக்கும்
September 26, 2026, 11:56 am
நாட்டில் தீவிரமடையும் புகைமூட்டம்: செரியானில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 26, 2026, 11:55 am
சபா கினாபத்தாங்கானில் லேசான நிலநடுக்கம்: மலேசிய வானிலை ஆய்வு துறை தகவல்
September 26, 2026, 11:21 am
நெகிரி செம்பிலான் அரச நிறுவன நெருக்கடியில் தலையிட மாட்டேன்: பிரதமர்
September 26, 2026, 11:12 am
இஸ்லாமிய வெறுப்பு, இணையவழி வெறுப்பை எதிர்த்துப் போராட மலேசியா உறுதி கொண்டுள்ளது: ஐ.நா.வில் முஹம்மது ஹசான்
September 26, 2026, 11:04 am
விளையாட்டுப் பள்ளி மாணவர் மரணம்: தங்கும் விடுதியில் தாக்கப்பட்டதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு
September 26, 2026, 12:25 am
