நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநில தேர்தல்: பெரிக்காத்தான் நேஷனல் - பாரிசான் நேஷனல் இடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது 

கோத்தா பாரு: 

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் இடைநீக்கம் ஒருபோதும் மலாக்கா மாநில தேர்தல் தயார்நிலையைப் பாதிக்காது என்று அதன் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ தக்கியுடின் ஹசான் கூறினார். 

இந்நிலையில் பெரிக்காத்தான் நேஷனல் - பாரிசான் நேஷனல் இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர் சொன்னார். 

இருப்பினும், எந்தெந்த தொகுதிகள் எந்தக் கட்சிக்கு ஒதுக்கப்படுவது என்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர் விளக்கினார்.

இது தொடர்பான விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள் தொடர்ந்து மிகச் சாதகமான முறையில் தீவிரமாக நடந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக ,மலாக்கா மாநில சட்டமன்றத்தை கலைப்பதாக மாநில முதலமைச்சர் அப்துல் ரவுஃப் யூசோப் செவ்வாய்கிழமை அறிவித்திருந்தார். 

கடந்த 2021 மலாக்கா மாநில தேர்தலில் மொத்தமுள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில் 21 இடங்களைக் கைப்பற்றி பாரிசான் நேஷனல் தனித்து ஆட்சியைக் அமைத்தது.

அதேவேளையில், அந்தத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் ஐந்து இடங்களிலும், பெரிக்காத்தான் நேஷனல் இரண்டு இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றிருந்தன

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset