நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தினத்திற்கு முன்பு பாரிசான் நேஷனல் அதன் வேட்பாளர்களை அறிவிக்கும் 

மலாக்கா: 

16ஆவது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் தேசிய முன்னணி அதன் வேட்பாளர்களை வேட்புமனுத் தாக்கல் தினத்திற்கு முன்பு அறிமுகம் செய்யும் என்று மலாக்கா மாநில பாரிசான் நேஷனல் தலைவர் அப்துல் ரவுஃப் யூசோப் கூறினார். 

தற்போதுவரை பாரிசான் நேஷனல் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் இன்னும் இறுதி செய்யவில்லை என்று அவர் தெரிவித்தார். 

இந்த மாநிலத் தேர்தலில் பாரிசான் நேசனல் தரப்பில் சில புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

மலாக்கா அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 15ஆவது மலாக்கா மாநில தேர்தலில் பாரிசான் நேஷனல் 21 இடங்களை வென்று தனித்தே மாநில அரசாங்கத்தை அமைத்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset