நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் நிரந்தரவாச (PR) விண்ணப்பம்: போலி விளம்பர மோசடியில் $400,000 இழப்பு

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் நிரந்திரவாசத்துக்கான (PR) விண்ணப்பச் சேவை மோசடியில் சுமார் 400,000 வெள்ளி இழப்பு ஏறபட்டுள்ளது.

குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையமும் காவல்துறையும் வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த விவரம் வெளியானது.

மோசடி பொதுவாகச் சமூக ஊடகம் வழி நடத்தப்படுகிறது.

சிங்கப்பூர் நிரந்திரவாசத்துக்கான விண்ணப்பச் சேவை வழங்குவதாகக் கூறும் போலி விளம்பரங்கள் பரவலாக வெளியிடப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளது.

அதை நம்பும் பொதுமக்கள் விளம்பரப் பதிவை அழுத்துவார்கள்.

முகவர் அமைப்பைப் போல் காணப்படும் போலி இணையப்பக்கத்தில் அவர்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களை அளித்துவிடுகின்றனர்.

200 வெள்ளி முதல் 90,000 வெள்ளி வரை கட்டணத்தையும் செலுத்துகின்றனர்.

பிறகு ஆணையத்தின் பெயரையும் சின்னத்தையும் வைத்து பொதுமக்களுக்குப் போலி மின்னஞ்சல் அனுப்பப்படும்.

ஆணையத்திடம் அது குறித்து சரிபார்க்கும்போது, பொதுமக்கள் மோசடியில் சிக்கியதை உணர்வதாக அதிகாரிகள் கூறினர்.

பொதுமக்கள் ஆணையத்திடம் நேரடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset