நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் அரச நிறுவன நெருக்கடியில் தலையிட மாட்டேன்: பிரதமர்

கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்டுவான் பெசாரின் பதவி தொடர்பான விஷயங்களில் தாம் தலையிடவில்லை.

அரச நிறுவனம் தொடர்பான எந்தவொரு சர்ச்சையும் அரசியலமைப்பு, சட்டத்தின்படி தீர்க்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

மலேசியாவில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு முடியாட்சி முறையில், ஓர் ஆட்சியாளரின் பதவிக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் தன்னிச்சையாக எடுக்கப்பட முடியாது.

அது அரசியலமைப்பின் விதிகளின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்று அவர் கூறினார்.

நான் தலையிட மாட்டேன் என்று சொன்னேன். நான் எதில் தலையிடுகிறேன்? முடிவெடுக்க அவர்களை அழையுங்கள். 

அவர்களை ஆதரிக்கும் கட்சிகள் இருக்கின்றன.

அவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கட்டும், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் தலையிட விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset