நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா  கினாபத்தாங்கானில் லேசான நிலநடுக்கம்: மலேசிய வானிலை ஆய்வு துறை தகவல் 

கோத்தா கினாபாலு: 

இன்று அதிகாலை 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சபா மாநிலத்தின் கினாபத்தாங்கான் பகுதியில் நிகழ்ந்தது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது 

இந்த நிலநடுக்கம் 5.1 டிகிரி வடக்கு மற்றும் 116.8 டிகிரி கிழக்கு என்ற அட்சரேகை மற்றும் தீர்க்கரேகையில் கண்டறியப்பட்டது.

நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, சபாவின் டோங்கோட் நகருக்குத் தென்மேற்கே சுமார் 34 கிலோமீட்டர் தொலைவிலும், இந்தோனேசியாவின் தாரக்கான் நகருக்கு வடமேற்கே 223 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருந்தது.

இந்த நிலநடுக்கம் 118 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

இருப்பினும், இந்தச் சம்பவத்தால் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் ஏற்படவில்லை என்று மெட்மலேசியா உறுதிப்படுத்தியது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset