நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஏசிசியின் சொத்து அறிவிப்பு நோட்டீஸ்; என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

எம்ஏசிசியின் சொத்து அறிவிப்பு நோட்டீஸ் விவகாரத்தில் என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை.

எம்ஏசிசியின் கோரிக்கையை கட்டாயம் நிறைவேற்றுவேன் என்று  மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

எனக்கு எதிரான சொத்து அறிவிப்பு நோட்டீசை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பகிரங்கமாக அறிவித்ததை, ஆணையத்தின் வாராந்திர முக்கிய செயல்திறன் குறியீடாக நான் பார்க்கிறன்.


எம்ஏசிசியிடமிருந்து அறிவிப்புக்காக மக்கள் காத்திருக்கும் இன்னும் பல முக்கியமான விஷயங்கள் உள்ளன.

ஆனால் இது இந்த வாரத்திற்கான எம்ஏசிசியின் முக்கிய செயல்திறன் குறியீடு என்று நான் நம்புகிறேன்.

முன்னதாக டத்தோஸ்ரீ சரவணன், அவரது மனைவி, அவர்களது மூன்று பிள்ளைகளுக்கு சொத்துக்களை அறிவிக்குமாறு அறிவிப்பு வழங்கப்படும் என்ற  எம்ஏசிசி தலைமை ஆணையர் அப்துல் ஹலீம் அமானின் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டதறகு அவர் இவ்வாறு சாடினார்.


அப்துல் ஹலீமின் கூற்றுப்படி, எம்ஏசிசி சட்டம் 2009இன் பிரிவு 36-இன் கீழ் உள்ள இந்த அறிவிப்பு நோட்டீஸ் டத்தோஸ்ரீ சரவணன், அவரது மனைவி, அவர்களது இரண்டு பிள்ளைகளுக்கு வரும்  திங்கட்கிழமை (செப்டம்பர் 28) அன்று வழங்கப்படும்.

வெளிநாட்டில் உள்ள டத்தோஸ்ரீ சரவணனின் மற்றொரு பிள்ளைக்கு நவம்பர் மாதம் இந்த அறிவிப்பு வழங்கப்படவுள்ளது என்று அவர் கூறினார்.

இது குறித்து விவரித்த டத்தோஸ்ரீ சரவணன், தன்னையும், தன் மனைவி, மூன்று பிள்ளைகளையும் அவர்களின் சொத்துக்களை அறிவிக்குமாறு எம்ஏசிசி விடுத்த கோரிக்கை ஆச்சரியமளிக்கவில்லை.

பொதுவாக, விளக்கப்படாத சொத்து உள்ளதா என்பதைச் சரிபார்க்கவே ஊழல் தடுப்பு ஆணையம் சொத்து அறிவிப்புகளைக் கோருகிறது.

இது ஒரு சாதாரண நடைமுறை. இந்தக் கோரிக்கையால் நான் ஆச்சரியப்படவில்லை.

இருப்பினும் நீதிமன்றத்தின் என் மீது குற்றம் சாட்டப்படுவதற்கு முன்பு அல்லாமல், குற்றம் சாட்டப்பட்ட பிறகு ஊழல் தடுப்பு ஆணையம் ஏன் என் சொத்துக்களை அறிவிக்குமாறு கேட்டது என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கு முன்பு இது கோரப்பட்டிருந்தால், அது விசாரணை செயல்முறையின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டிருக்கலாம்.

ஆனால் இப்போது அதைக் கேட்பது சற்று ஆச்சரியமாக இருக்கிறது.

எனக்குச் சொத்து அறிவிப்பு அறிவிப்பைச் சமர்ப்பிப்பது என்பது, ஆணையத்தின் தலைவரே அதைப் பற்றிப் பேசும் அளவுக்கு அறிவிக்கப்பட வேண்டிய ஒன்றா? என்று அவர் கேட்டார்.

இருப்பினும், என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை.

ஊழல் தடுப்பு ஆணையத்தின் கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றுவேன் என்று டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.

எப்படியிருந்தாலும், என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. நான் முழுமையாக இணங்கி, எனது சொத்துக்கள் அனைத்தையும் அறிவிப்பேன் டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset