நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விளையாட்டுப் பள்ளி மாணவர் மரணம்: தங்கும் விடுதியில் தாக்கப்பட்டதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு

கோல பிலா:

நெகிரி செம்பிலான், கோல பிலாவில் உள்ள ஒரு விளையாட்டுப் பள்ளியில் இரண்டாம் படிவ மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

அவர் தாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோல பிலா போலிஸ் தலைவர் முஹம்மது முஸ்தபா ஹுசைன் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியதோடு, இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.

சிரம்பானில் உள்ள துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, பள்ளியின் தங்கும் விடுதியில் மாணவர் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பல பதிவுகள் கூறின.

பாதிக்கப்பட்டவரின் அத்தை என்று கூறிக்கொண்ட ஒரு பெண், பாதிக்கப்பட்டவரின் தாய் தன்னைத் தொடர்பு கொண்ட பின்னரே தங்கள் குடும்பத்திற்கு மரணம் குறித்துத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக நான்காம் படிவ மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அப் பெண் கூறினார்.

இருப்பினும், பாதிக்கப்பட்டவர் தாக்கப்பட்டார் என்ற கூற்றையும், மாணவர் கைது செய்யப்பட்டதையும் போலிஸ் உறுதிப்படுத்தவில்லை.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset