நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கூட்டணி இடைநீக்கம்; தேசிய முன்னணியின் பலத்தைப் பாதிக்காது: டத்தோஸ்ரீ சரவணன்

தாப்பா:

கடந்த புதன்கிழமை முதல் அனைத்து தேசியக் கூட்டணியின் நடவடிக்கைகளும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது, மலாக்கா மாநிலத் தேர்தலை  எதிர்கொள்வதற்கான தேசிய முன்னணியின் தயார் நிலையை பாதிக்கவில்லை.

மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

முந்தைய நெகிரி செம்பிலான், ஜொகூர் தேர்தல்களில் நல்ல சாதனைகளைப் படைத்த தேசிய முன்னணி உண்மையில் சுதந்திரமானது.

நெகிரி செம்பிலான், ஜொகூரின் வரலாற்றைப் பார்த்தால், மக்கள் தேசிய முன்னணியை மிகவும் நேசிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

தேசிய முன்னணி தலைவர் முன்பு கூறியது போல், நாங்கள் தனித்துச் செல்வோம்.

தாப்பா விளையாட்டு வளாகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ சரவணன், இளங்களை, டிப்ளோமா, சான்றிதழ், படிவம் 6 ஆகியவற்றில் பயிலும் 196 மாணவர்களுக்கு  2026 கல்வி உதவி நிதியை வழங்கனார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset