செய்திகள் மலேசியா
தாப்பாவில் 193 மாணவர்களுக்கு உதவி நிதி; கல்வி என்பது அனைவரின் உரிமை, தகுதியானவர்களுக்கான சிறப்புரிமை அல்ல: டத்தோஸ்ரீ சரவணன்
தாப்பா:
கல்வி என்பது அனைவரின் உரிமை. தகுதியானவர்களுக்கான சிறப்புரிமை அல்ல.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை வலியுறுத்தினார்.
கடந்த 2018ஆம் ஆண்டு தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றது முதல் இத்தொகுதி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறேன்.
குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு உதவி நிதியை வழங்கி வருகிறேன்.
அவ்வகையில் இன்று மொத்தம் 193 மாணவர்களுக்கு இன்று உயர் கல்வி நிதி வழங்கப்பட்டது.
USM, UPSI, UiTM, UUM, UniMAP, UniKL, IIUM போன்ற பல்வேறு முன்னணி பல்கலைக்கழகங்களும், பல்வேறு TVET, பாலிடெக்னிக், மெட்ரிகுலேஷனில் பயில வாய்ப்பு கிடைத்த மாணவர்களுக்கு இந்நிதி வழங்கப்பட்டது.
எனது கொள்கைகள் தெளிவாக உள்ளன. கல்வி என்பது அனைவரின் உரிமை, உடல் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமான சிறப்புரிமை அல்ல.
தாப்பா நாடாளுமன்றத்தில், நிதி நெருக்கடிகள் காரணமாக எந்தவொரு குழந்தையும் தங்கள் கனவுகளை ஒத்திவைக்கவோ அல்லது கல்வியைத் தொடர்வதைக் கைவிடவோ நிர்பந்திக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த முயற்சி ஒரு முறை வழங்கப்படும் உதவி மட்டுமல்ல.
மாறாக, தங்கள் குடும்பங்கள், சமூகங்களின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய, அறிவுமிக்க தலைமைத்துவ வாரிசுகளின் ஒரு தலைமுறையை உருவாக்குவதற்கான ஒரு நீண்டகால உத்திசார் முதலீடாகும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 25, 2026, 4:59 pm
மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல்: அக்டோபர் 7ஆம் தேதி மலேசிய தேர்தல் ஆணையம் சிறப்பு கூட்டம்
September 25, 2026, 4:02 pm
தேசியக் கூட்டணி இடைநீக்கம்; தேசிய முன்னணியின் பலத்தைப் பாதிக்காது: டத்தோஸ்ரீ சரவணன்
September 25, 2026, 3:31 pm
நெகிரி செம்பிலான் அரசியலமைப்பு நெருக்கடி: முந்தைய அரசாங்கத்தின் மீது பழிப்போடாதீர்
September 25, 2026, 2:13 pm
நஜிப் ரசாக்கின் நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பு: அதிகாரப்பூர்வ கடிதம் இன்னும் கிடைக்கவில்லை
September 25, 2026, 2:12 pm
நெகிரி செம்பிலான் மாநில விவகாரத்தில் சட்டத்துறை அலுவலகம், பிரதமர் தலையிட வேண்டாம்
September 25, 2026, 12:33 pm
