செய்திகள் மலேசியா
மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல்: அக்டோபர் 7ஆம் தேதி மலேசிய தேர்தல் ஆணையம் சிறப்பு கூட்டம்
கோலாலம்பூர்:
மலாக்கா மாநிலத் தேர்தல் நடவடிக்கைகளுக்காகத் தேர்தல் ஆணையம் (SPR) வரும் அக்டோபர் 7-ஆம் திகதி சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யவுள்ளது.
இந்தத் தகவலைத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ கைருல் ஷஹ்ரில் ஓர் அறிக்கையின் வாயிலாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 23-ஆம் திகதியன்று 15-வது மலாக்கா மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து இந்தக் கூட்டம் கூட்டப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோஶ்ரீ ராம்லான் ஹாரூன் தலைமையில் இந்த முக்கியக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தேர்தல் எழுத்துப்பூர்வ ஆணைத் திகதி, வேட்புமனுத் தாக்கல் நாள் மற்றும் வாக்குப்பதிவு நாள் உள்ளிட்ட மிக முக்கியமான தேதிகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
அத்துடன், இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர் பட்டியல் குறித்தும் விரிவாக ஆராயப்படும்.
மேலும், தேர்தல் நடவடிக்கைகளைச் சுமூகமாக நிறைவேற்றுவதற்கான பிற ஆயத்தப் பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்படும்
சம்பந்தப்பட்ட தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டவுடன் இது குறித்து விரிவாகப் பேசப்படும்.
இச்சிறப்புக் கூட்டம் நிறைவடைந்த உடனேயே செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 25, 2026, 4:02 pm
தேசியக் கூட்டணி இடைநீக்கம்; தேசிய முன்னணியின் பலத்தைப் பாதிக்காது: டத்தோஸ்ரீ சரவணன்
September 25, 2026, 3:31 pm
நெகிரி செம்பிலான் அரசியலமைப்பு நெருக்கடி: முந்தைய அரசாங்கத்தின் மீது பழிப்போடாதீர்
September 25, 2026, 2:13 pm
நஜிப் ரசாக்கின் நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பு: அதிகாரப்பூர்வ கடிதம் இன்னும் கிடைக்கவில்லை
September 25, 2026, 2:12 pm
நெகிரி செம்பிலான் மாநில விவகாரத்தில் சட்டத்துறை அலுவலகம், பிரதமர் தலையிட வேண்டாம்
September 25, 2026, 12:33 pm
