நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் மக்கள்தொகை 6.21 மில்லியனாக உயர்வு: நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை 550,000 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 6.21 மில்லியனாக உயர்ந்துள்ளது.

2025 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 1.6 விழுக்காடு அதிகம்.

வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாகக் கட்டுமானத் துறையில் வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.

சாங்கி விமான நிலைய முனையம் 5, மரினா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) விரிவாக்கம், கூடுதல் வீடுகள், போக்குவரத்துக் கட்டமைப்பு போன்ற திட்டங்களுக்கு அதிக ஊழியர்கள் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் சிங்கப்பூர்க் குடிமக்களின் எண்ணிக்கையும் சற்று அதிகரித்துள்ளது.

நிரந்தரவாசிகளின் எண்ணிக்கையில் பெரிய மாற்றமில்லை.

அது 550,000 என்ற அளவில் உள்ளது.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset