செய்திகள் கலைகள்
கௌதம் வாசுதேவ் மேனனின் 25ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஒன்றா இரண்டா மாபெரும் இசை விழாவின் முதன்மை ஆதரவாளர்களுக்கு அங்கீகாரம்
கோலாலம்பூர்:
கௌதம் வாசுதேவ் மேனனின் 25ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 'ஒன்றா இரண்டா' மாபெரும் இசை விழாவின் முதன்மை ஆதரவாளர்கள் இன்று அங்கீகரிக்கப்பட்டனர்.
புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், படைப்பாளி கௌதம் வாசுதேவ் மேனனிம் இந்திய சினிமாவில் அவரது அற்புதமான 25 ஆண்டுக்கால சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில் ONDRA RENDA 25 YEARS OF GVM எனும் மாபெரும் கலை விழா மலேசியாவில் நடைபெறவுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்வு எதிர்வரும் அக்டோபர் 10ஆம் தேதி சனிக்கிழமை கோலாலம்பூரில் உள்ள The Arch Galeries-இல் நடைபெறவுள்ளது.
இம் மாபெரும் விழா My Events International, Radaan Mediaworks ஆகியவை இணைந்து படைக்கவுள்ளன.
GVM-இன் மிகவும் நினைவில் நிற்கும் திரைப்படங்கள், கதாபாத்திரங்கள், காட்சிகள், இசைத் தருணங்களின் பின்னணியில் உள்ள கதைகள், உத்வேகங்கள், படைப்பு செயல்முறைகள், தனிப்பட்ட அனுபவங்களை கண்டறியும் அரிய வாய்ப்பை இந்த இசை விழா வழங்கும்.
மேலும் கார்த்திக், ஸ்ருதி ஹாசன், சத்ய பிரகாஷ், சைந்தவி, பால் டப்பா, பிளேஸ், ஹரி பிரியா, கிருஷ். இவர்களுடன் காதுக்கு இனிமை சேர்க்கும் நேரடி இசைக் குழுவும் இணைகிறது.
ஆக இந்த இசை விழா மலேசிய வரலாற்றில் இடம் பிடிக்கவுள்ளது.
இந்நிலையில் இந்த இசை விழாவின் முதன்மை ஆதரவாளர்களை அங்கீகரிக்கும் விழா இன்று பெர்ஜயா டைம்ஸ் ஸ்குவேயர் ஹோட்டலில் நடைபெற்றது.
Ehsan Group, Al Ehsan, Royal Kings Group, Kopatha, Bombay Jewellers, Al Safa, Kaara Saram, Little Caterers, Looks Salon, Berjaya Hospitality, Maha Berjaya ஆகிய நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
My Events International தோற்றுநர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் இந்நிறுவனத்தின் உரிமையாளர்களை கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
பிக் பாஸ் தமிழில் முதலமைச்சர் விஜய்யை சீண்டினாரா நடிகர் விஜய் சேதுபதி ? சமூக ஊடகங்களில் வெடித்தது கலவரம்
September 10, 2026, 4:45 pm
இசைஞானி இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சரிகமா இந்தியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
September 7, 2026, 9:47 pm
உலக அழகி போட்டி: மலேசிய தமிழ்ப் பெண் தனுசியாவுக்கு 3-ஆம் இடம்
September 6, 2026, 4:19 pm
