நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கொடூரமாகப் பிடுங்கப்படும் நெருப்புக் கோழி இறகுகள்: வலியால் துடிக்கும் அந்த ஜீவன்கள்

டர்பன்:

தென்னாப்பிரிக்காவில் உள்ள பண்ணைகளில் நெருப்புக் கோழிகளின் இறகுகள் கொடூரமாகப் பிடுங்கப்படுவதாக உலக விலங்கு நலப் பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது.

பெரிய ஆடம்பர ஆடை நிறுவனங்களுக்கு இறகுகள் விற்கப்படுகின்றன.

நெருப்புக் கோழி உயிருடன் இருக்கும்போதே வலி நிவாரணம் கொடுக்காமல் அதன் இறகு பறிக்கப்படுகிறது.

Collective Fashion Justice எனும் நிறுவனம் அமைப்புடன் இணைந்து நடத்திய சோதனையில் அது தெரியவந்தது.

நெருப்புக் கோழி வர்த்தகத்தில் தென்னாப்பிரிக்கா முன்னணியில் உள்ளது.

அதன் இறைச்சி, தோல், இறகுகள் ஆகியவற்றை அந்நாடு ஏற்றுமதி செய்கிறது.

உலகத் தேவையில் முக்கால்வாசியை அதுவே பூர்த்தி செய்கிறது.

நெருப்புக் கோழிகள் இயற்கையாக உதிர்க்கும் இறகுகளே சேகரிக்கப்படுவதாக பண்ணைகள் கூறியிருந்தன.

விசாரணை முடிவு உண்மையை அம்பலமாக்கியிருக்கிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset