செய்திகள் உலகம்
வங்காளதேசத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள்: 500 பேர் கைது
டாக்கா:
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. போலிசார் சுமார் 500 பேரை கைது செய்துள்ளனர்.
சென்ற வாரம் அங்கு அவ்வப்போது நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. சில இடங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
டாக்காவில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
சாலைகளில் 200க்கும் அதிகமான சோதனைச்சாவடிகளைக் காவல்துறை அமைத்துள்ளது.
குறிப்பாக டாக்காவுக்குச் செல்லும் நான்கு முக்கியப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன.
சென்ற வாரம் 15ஆம் தேதி உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே நாட்டு வெடிகுண்டு வெடித்தது.
செப்டம்பர் 20ஆம் தேதி உயர் நீதிமன்றம் அருகே குண்டுவெடித்தது.
கடந்த சனிக்கிழமை (19 செப்டம்பர்) பேருந்து முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பேருந்துக்கும் வேறு இடத்தில் இருந்த மற்றொரு பேருந்துக்கும் தீ வைக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த வன்முறை ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் அவாமி லீக் (Awami League) கட்சியின் பொதுச் செயலாளர் ஒபைதுல் காதருக்கு (Obaidul Quader) மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதை எதிர்த்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
அவர் கட்சியைச் சேர்ந்த ஹசினா ஊழல்கள் புரிந்து இந்தியாவிற்கு தப்பி ஓடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2026, 5:59 pm
ஈரானிய விமான நிறுவனங்களுக்கு அனைத்துலகத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை
September 22, 2026, 3:31 pm
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் 3 சகோதரிகள் கைது
September 21, 2026, 10:41 pm
போரை நிறுத்த அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகளை விதித்த ஈரான்
September 21, 2026, 3:31 pm
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மீது ஹௌதி போராட்டவாதிகள் வான்வழி தாக்குதல்
September 20, 2026, 7:36 pm
விமானத்தில் சட்டையைக் கிழித்துச் சண்டை
September 19, 2026, 11:33 am
சவூதி அரேபியாவின் ரியாத்தில் பலத்த வெடி சத்தம்: வான்வழி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
September 19, 2026, 11:17 am
கிரீன்லாந்து பாதுகாப்பினை உறுதிப்படுத்த்அ அமெரிக்கா -டென்மார்க் இடையே ஒப்பந்தம்: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
September 16, 2026, 10:43 pm
வானிலிருந்து செய்திக்காக படம் பிடித்துக் கொண்டிருந்த NBC செய்தி நிறுவன ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: மூவர் மரணம்
September 15, 2026, 10:30 pm
