செய்திகள் உலகம்
போரை நிறுத்த அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகளை விதித்த ஈரான்
டெஹ்ரான்:
மேற்காசிய போரை நிறுத்த அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது. இந்த நிபந்தனைகளை நிராகரித்தால் போருக்கு தயாராக உள்ளோம் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலை தொடங்கியது. சுமார் 7 மாதங்களாக இருதரப்பு இடையே போர் நீடித்து வருகிறது. ஈரானின் ராணுவ தளங்கள், ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடியாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
போரை நிறுத்த அமெரிக்கா, ஈரான் இடையே கத்தார் அரசு சமரச முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெஸாயீ கூறியதாவது:
போரை நிறுத்த அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகளை விதித்துள்ளோம். கத்தார் வாயிலாக இந்த நிபந்தனைகளை அமெரிக்காவிடம் அளித்திருக்கிறோம். ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.
முடக்கப்பட்ட ஈரானின் நிதி ஆதாரங்களை விடுவிக்க வேண்டும். ஈரான் துறைமுகங்களை குறிவைத்து கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டு இருக்கிறது.
எங்களது கப்பல்களின் சுதந்திரமான கடல்வழி போக்குவரத்தை உறுதிசெய்ய வேண்டும். இவை உள்ளிட்ட 7 நிபந்தனைகளை விதித்திருக்கிறோம். அமெரிக்காவின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
எங்களது நிபந்தனைகளை நிராகரித்தால் போருக்கு தயார் நிலையில் உள்ளோம். இவ்வாறு மொஹ்சென் ரெஸாயீ தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிட்டனின் ஆர்ஏஎப் விமானப் படைத் தளம், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்களில் பி1பி உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இராக், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, ஈரான், கத்தார், லெபனான், குவைத், ஜோர்டானில் வசிக்கும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அந்தந்த நாடுகளுக்கான அமெரிக்க தூதரகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
எனவே அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் மிகப்பெரிய போர் ஏற்படக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 3:31 pm
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மீது ஹௌதி போராட்டவாதிகள் வான்வழி தாக்குதல்
September 20, 2026, 7:36 pm
விமானத்தில் சட்டையைக் கிழித்துச் சண்டை
September 19, 2026, 11:33 am
சவூதி அரேபியாவின் ரியாத்தில் பலத்த வெடி சத்தம்: வான்வழி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
September 19, 2026, 11:17 am
கிரீன்லாந்து பாதுகாப்பினை உறுதிப்படுத்த்அ அமெரிக்கா -டென்மார்க் இடையே ஒப்பந்தம்: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
September 16, 2026, 10:43 pm
வானிலிருந்து செய்திக்காக படம் பிடித்துக் கொண்டிருந்த NBC செய்தி நிறுவன ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: மூவர் மரணம்
September 15, 2026, 10:30 pm
சிங்கப்பூரில் 10,000க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப்களில் ஊடுருவி SMS அனுப்பிய ஆடவருக்குச் சிறை
September 15, 2026, 10:22 pm
ஏமன் உள்நாட்டுப் பூசல்: வாழ வழிதேடி இடம்பெயரும் மக்கள்
September 15, 2026, 10:17 pm
இன்றுமுதல் தாய்லாந்தில் விசா இல்லாத பயணம்: இனி ஒரு மாதம் மட்டுமே
September 15, 2026, 10:44 am
