நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மீது ஹௌதி கிளச்சியாளர்கள் வான்வழி தாக்குதல் 

ரியாத்: 

சவுதி அரேபியா நாட்டின் தலைநகர் ரியாத் மீது ஹௌதி கிளர்ச்சியாளர் வான்வழி தாக்குதலை மேற்கொண்டனர் 

இந்தத் தாக்குதல்களில் ஆளில்லா dron-களும் சக்திவாய்ந்த பாலிட்டிக் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்தது 

இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தையும் பாதுகாப்பு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளன.

சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படையினர் ரியாத்தை நோக்கி வந்த ஒரு பாலிடிக் ஏவுகாரையை வெற்றிகரமாக வழிமறித்து நடுவானில் தடுத்து அழித்தனர்.

தலைநகரின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் தொட்டிப் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறுவது தெளிவாகக் காணப்பட்டது.

இந்த திடீர் வான்வழித் தாக்குதல் காரணமாக அங்குள்ள விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டன.

ஈரானின் முழு ஆதரவுடன் செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் பொது விமான நிலையங்கள் மீது தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

சவுதி அரேபியாவிற்கு எதிரான இந்தத் ராணுவ மோதல் மிக விரைவில் மேலும் பரவும் அபாயம் உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset