நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விமானத்தில் சட்டையைக் கிழித்துச் சண்டை

டாக்கா:

விமானத்தில் பயணிகள் இருவர் தங்களது சட்டை கிழியும் அளவிற்குச் சண்டையிட்டுள்ளனர்.

சம்பவம் பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் (Biman Bangladesh Airlines) விமானத்தில் நடந்துள்ளது.

பங்களாதேஷின் சில்ஹெட் (Sylhet) வட்டாரத்திலிருந்து லண்டனுக்கு விமானம் புறப்பட்டது.

11 மணி நேர விமானப் பயணத்தில் முன் இருக்கையில் இருந்தவருக்கும் பின் இருக்கையில் இருந்தவருக்கும் கடுமையான சண்டை மூண்டுள்ளது.

சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்படும் காணொலியில் ஆடவர்கள் இருக்கையில் நின்றவாறு கைகலப்பில் ஈடுபடுவதைப் பார்க்கமுடிகிறது.

அதில் முன் இருக்கையில் இருப்பவரின் சட்டை கிழிந்தது.

அக்கம்பக்கத்தில் இருக்கும் பயணிகள் கூச்சலிடுகின்றனர்

சிலர் சண்டையைத் தடுத்து நிறுத்தவும் முனைகின்றனர்.

விமானச் சிப்பந்திகள் பின்னர் சண்டையிடும் இருவரையும் கட்டுப்படுத்துகின்றனர்.

நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகப் பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் பின்னர் கூறியது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset