செய்திகள் மலேசியா
நஜிப்பின் வீட்டுக் காவல்; மாமன்னரின் முடிவை எதிர்ப்பது அரசியலமைப்புக்கு முரணானது: ஜாஹித்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு தொடர்பான மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் முடிவை எதிர்க்கும் எந்தவொரு தரப்பும், கூட்டாட்சி அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு முரணானது.
மாமன்னரால் அங்கீகரிக்கப்பட்ட பொதுமன்னிப்பு வாரியத்தின் முடிவு, அந்த பொதுமன்னிப்பு முடிவுக்கு வழிகாட்டியாக இருந்த சட்ட விதிகளால் கட்டுப்படுத்தப்பட்டது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.
மாமன்னரின் அங்கீகரிக்கப்பட்ட பொதுமன்னிப்பு வாரியத்தால் எடுக்கப்பட்ட முடிவு, மலேசிய அரசியலமைப்பின் பல பிரிவுகளால் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
மேலும், பொதுமன்னிப்பு முடிவுக்கு சட்ட அம்சங்கள் வழிகாட்டியாக இருந்தன என்பதையும் மாமன்னர் கருத்தில் கொண்டிருந்தார்கள்.
மாமன்னரின் முடிவை எந்தக் கட்சியாவது எதிர்த்தால், அது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்கவில்லை என்று பொருள்.
மேலும், சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும் என்பதில் அம்னோ, தேசிய முன்னணி உறுதியாக நிற்கின்றன.
நான் இதற்கு முன்பு வெளியிட்ட அறிக்கைகளில் கூறியது போலவே, நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்று ஜாஹித் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2026, 10:48 pm
பெர்சத்து தனியாக போட்டியிட முடியாது; கூட்டணிக்கு நண்பர்கள் தேவை: டான்ஸ்ரீ மொஹைதின்
September 19, 2026, 10:46 pm
அரசியலமைப்பின் கீழ் உள்ள மாமன்னரின் மன்னிப்பு அதிகாரத்தை மதியுங்கள்: டத்தோஸ்ரீ ரமணன்
September 19, 2026, 10:45 pm
அந்தோனி லோக் விலகல்; இதை தான் ஆர்டர் செய்தது ஒன்று, வந்தது ஒன்று எனக் கூறுவார்கள்: ங்காவை சீண்டிய அக்மால்
September 19, 2026, 6:48 pm
போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து அந்தோனி லோக் விலகல்
September 19, 2026, 4:28 pm
கல்வி என்பது வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகச் சிறந்த முதலீடு: மலேசியாவுக்கான இந்தியத் தூதர் ஸ்ரீ சோம்நாத் கோஷ்
September 19, 2026, 4:15 pm
