நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வி என்பது வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகச் சிறந்த முதலீடு: மலேசியாவுக்கான இந்தியத் தூதர் ஸ்ரீ சோம்நாத் கோஷ்

சைபர்ஜெயா:

முக்மின் அமைப்பின் ஏற்பாட்டில் Malaysia Future Leaders scholorship நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மலேசியாவுக்கான இந்தியர் தூதர் ஸ்ரீ சோம்நாத் கோஷ்
கல்வி என்பது வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகச் சிறந்த முதலீடு என்று கூறினார்.

மலேசிய உயர் கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழகப் பிரதிநிதிகள், முக்மின் அமைப்பின் நிர்வாகிகள், மாணவர்கள், பெற்றோர்களை 
இந்தியத் தூதர் ஸ்ரீ சோம்நாத் கோஷ்
வாழ்த்தி உரையாற்றினார்.

முக்மின் அமைப்பின் முதல் Future Leaders Scholars நிகழ்ச்சி என்பதால், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி என்று நான் எண்ணுகிறேன்.

 தலைமைத்துவத் திறன், தன்னம்பிக்கை, தொழில்முனைவு, புதுமை மற்றும் சமூகப் பொறுப்பு
ஆகியவற்றை இந்த அமைப்பு வழங்குகிறது என்று கூறப்பட்டது.

மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளி மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் தொழில்கள், நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன் என்று 
இந்தியத் தூதர் ஸ்ரீ சோம்நாத் கோஷ் கூறினார்.

மாணவர்கள் தங்கள் இந்திய பாரம்பரியம், நம்பிக்கையைப் பெருமையாகக் கொண்டிருந்தாலும், முதன்மையாக மலேசியாவின் நல்ல குடிமக்களாக இருந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

இந்தியா, மலேசியா இடையிலான நட்பு, அமைதி, பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த மாணவர்கள் இரு நாடுகளுக்கும் தூதர்களாக செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்திய உயர் ஆணையகம் மாணவர்கள், பெற்றோர், இந்திய வம்சாவளியினருக்கு எப்போதும் ஆதரவளிக்கும் என  அவர் உறுதி அளித்தார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset