நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை நஜிப் செலுத்த உதவுவது பாஸ் கட்சி உறுப்பினர்களின் தனிப்பட்ட முடிவாகும்: துவான் இப்ராஹிம்

கோத்தாபாரு:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துவதற்காக, ஒற்றுமை நிதிக்கு பங்களிப்பது பாஸ் கட்சி உறுப்பினர்களின் தனிப்பட்ட முடிவாகும்.

அந்தத் தொகை வசூலிக்கப்படும் என்பதில் தானும் நம்பிக்கையுடன் இருப்பதாக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.

இந்த நிதிக்கு பங்களிக்குமாறு பாஸ் கட்சி அதன் உறுப்பினர்களை வலியுறுத்தவில்லை.

அது உறுப்பினர்களின் தனிப்பட்ட முடிவாகும்.

அனைவருக்கும் நீதி என்ற கொள்கையை நிலைநிறுத்துவதன் அடிப்படையில், இந்தத் தொகை திரட்டப்படும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று அவர் கூறினார்.

இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, நிதி வசூல் 1 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளதாக அம்னோ பொதுச் செயலாளர் அஷ்ராஃப் வாஜ்தி டுசுகி அறிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset