செய்திகள் மலேசியா
அந்தோனி லோக் விலகல்; இதை தான் ஆர்டர் செய்தது ஒன்று, வந்தது ஒன்று எனக் கூறுவார்கள்: ங்காவை சீண்டிய அக்மால்
கோலாலம்பூர்:
ஏன் அந்தோனி லோக் வெளியயேறினார். ஏன் ங்கா வெளியேறவில்லை.
இதை தான் இதை தான் ஆர்டர் செய்தது ஒன்று, வந்தது ஒன்று எனக் கூறுவார்கள் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே கூறினார்.
நஜிப் ரசாக்கிற்கு கருணை காட்டிய விவகாரத்தில், போக்குவரத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய ஜசெக பொதுச் செயலாளர் அந்தோனி லோக் எடுத்த முடிவைத் தொடர்ந்து ஜசெக துணைத் தலைவர் ங்கா கோர் மிங்கை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் நஜிப் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டால் ராஜினாமா செய்வதாக ங்கா சபதம் செய்திருந்தார்.
ஆனால் அவருக்குப் பதிலாக லோக் ஏன் ராஜினாமா செய்கிறார் என்று அக்மல் கேள்வி எழுப்பினார்.
ராஜினாமா கடிதம் எழுதுவது எப்படி என்பதை நீங்கள் மறந்துவிட்டாலோ அல்லது மறந்தது போல் நடித்தாலோ, நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன் என்று அக்மால் இன்று இரவு ஒரு முகநூல் பதிவில் கூறினார்.
ங்கா வெறும் வாய்ச் சவடால் மட்டுமே விட்டார். ஆனால் லோக் தான் உண்மையில் செயல்பட்டார்.
இறுதியில், ங்கா அமைச்சராகவே நீடிக்கிறார். என்னவொரு புத்திசாலித்தனம் என்று அவர் எழுதினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2026, 10:49 pm
நஜிப்பின் வீட்டுக் காவல்; மாமன்னரின் முடிவை எதிர்ப்பது அரசியலமைப்புக்கு முரணானது: ஜாஹித்
September 19, 2026, 10:48 pm
பெர்சத்து தனியாக போட்டியிட முடியாது; கூட்டணிக்கு நண்பர்கள் தேவை: டான்ஸ்ரீ மொஹைதின்
September 19, 2026, 10:46 pm
அரசியலமைப்பின் கீழ் உள்ள மாமன்னரின் மன்னிப்பு அதிகாரத்தை மதியுங்கள்: டத்தோஸ்ரீ ரமணன்
September 19, 2026, 6:48 pm
போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து அந்தோனி லோக் விலகல்
September 19, 2026, 4:28 pm
கல்வி என்பது வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகச் சிறந்த முதலீடு: மலேசியாவுக்கான இந்தியத் தூதர் ஸ்ரீ சோம்நாத் கோஷ்
September 19, 2026, 4:15 pm
