நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜசெக அரசாங்கத்தை விட்டு வெளியேறவும், பிரதமர் நம்பிக்கையை இழக்கவும், நாடாளுமன்றம் கலைக்கப்படவும் சிலர் காத்திருக்கின்றனர்: அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கையை இழந்து, நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை, தங்கள் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதைக் காண சிலர் காத்திருப்பதாக ஜசெக பொதுச் செயலாளர் அந்தோனி லோக் ஒப்புக்கொண்டார்.

அந்தக் காரணத்திற்காக, அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்யும் தனது முன்மொழிவு, போக்குவரத்து அமைச்சராக மட்டுமே தன்னை உள்ளடக்கும் என்று அவர் கூறினார்.

இந்த நடவடிக்கை, பிரதமர் நம்பிக்கையை இழந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டிய நிலை உள்ளிட்ட அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதை ஜசெக விரும்பவில்லை.

சில கட்சிகள் தங்களின் அரசியல் லட்சியங்களை அடைவதற்காக ஆடும் அரசியல் விளையாட்டுகளை ஜசெக அறிந்திருக்கிறது.

ஆனால் நாங்கள் அவர்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம்  என்று அவர் இன்று இங்குள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஜசெக மத்திய செயற்குழுவின்அவசரக் கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset