நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்து தனியாக போட்டியிட முடியாது; கூட்டணிக்கு நண்பர்கள் தேவை: டான்ஸ்ரீ மொஹைதின்

பெட்டாலிங்ஜெயா:

வரவிருக்கும் தேர்தலில் பெர்சத்து தனியாகப் போட்டியிடாது. மாறாக அதன் போராட்டக் கொள்கைகளை மதிக்கும் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தேர்வு செய்துள்ளது.

பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை கூறினார்.

பெர்சத்து தனியாகப் போட்டியிடுவதை ஏற்கவில்லை. மேலும் கட்சி ஒரு அரசியல் கூட்டணியில் இருக்க வேண்டும்.

என்னைக் கேட்டால், பதில் ஆம் என்பதுதான். நாம் தனியாகப் போட்டியிட வேண்டும் என்ற கருத்தை நான் ஏற்கவில்லை.

நாம் கட்சிகளின் கூட்டணியில் இருக்க வேண்டும்.என்று இன்று இரவு இங்கு நடைபெற்ற பெர்சத்துவின் 10வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் பேசும்போது அவர் கூறினார்.

தேர்தல் ஒத்துழைப்பிற்கு முன்னோடியாக மூடா, பெர்சத்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும், மேலும் புத்ரா திறந்த மனப்பான்மைக்கான சமிக்ஞையைப் பெற்றுள்ளதாகவும் டான்ஸ்ரீ மொஹைதின் கூறினார்.

ஏற்கனவே பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் கூட்டணி அமைப்பது குறித்த இரு கட்சிகளின் பதிலும் மிகவும் சாதகமாக இருப்பதாகத் தெரிகிறது.

இறைவன் அனுமதித்தால், இந்த ஒத்துழைப்பைத் தொடர்வோம். அதன் விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset