நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வி ஒரு தலைமுறையை மாற்றும் சக்தி கொண்டது: முக்மின் தலைவர் டத்தோ வீரா ஷாகுல் தாவுத்

சைபர் ஜெயா:

கல்வி மூலம் மலேசிய இந்திய முஸ்லிம் சமூகத்தின் அடுத்த தலைமுறையை உருவாக்குவது, இளைஞர்களுக்கு வாய்ப்பும் நம்பிக்கையும் அளிப்பது, மேலும் கல்வி, தொழில்முனைவோர் வளர்ச்சியை சமூகத்தின் முக்கிய முன்னுரிமைகளாக மாற்றுவது முக்கியம் என்று முக்மின் அமைப்பின் தலைவர் டத்தோ வீரா ஷாகுல் ஹமீத் தாவுத் கூறினார்.

மலேசியாவிற்கான இந்திய உயர் ஆணையர் ஸ்ரீ சோம்நாத் கோஷ், மலேசிய உயர்கல்வி அமைச்சின் உயர்கல்வி தலைமை இயக்குநர் டத்தோ பேராசிரியர் டாக்டர் அஸ்லிண்டா பிந்தி அஸ்மான், Universiti Cyberjaya தலைவர் டான் ஸ்ரீ டத்தோ டாக்டர் பாலன் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பக் கல்வி வழங்குநர்கள், PTPTN நிர்வாகம் ஆகியோருக்கு நான் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக டத்தோ வீரா ஷாகுல் கூறினார்.

Mukmin அமைப்பின் நிர்வாகக் குழு, ஆலோசகர்கள், ஊடக நண்பர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், நன்கொடையாளர்கள்
அனைவரும் தங்களது பிஸியான நேரத்திலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியதற்காக நன்றி தெரிவித்துகொள்வதாக அவர் கூறினார்.

இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவது
குடும்பங்களுக்கு நம்பிக்கை அளிப்பது
திறமையான மாணவர்களின் கனவுகளை நனவாக்குவது, சமூகத்தின் அடுத்த தலைமுறையை உருவாக்குவது, கல்வி, திறன், தலைமைத்துவம், சமூக சேவை ஆகியவற்றை வளர்ப்பது என்ற விரிவான நோக்கங்களை முக்மின் அமைப்பு கொண்டுள்ளது என்று டத்தோ வீரா ஷாகுல் குறிப்பிட்டார்.

கல்வி என்பது ஒரு சான்றிதழ் அல்லது வேலை பெறுவதற்கான வழிமுறை மட்டுமல்ல; அது ஒரு தலைமுறையின் வாழ்க்கையை மாற்றக்கூடிய சக்தி என்று கூறினார்.

ஒரே ஒரு இளைஞருக்கு கல்வி வழங்கப்படும்போது, அந்த மாணவரின் வாழ்க்கை மட்டுமல்லாமல் குடும்பமும் பின்னர் முழு சமூகமும் முன்னேறும்.

கல்வி சமூகத்தின் முக்கிய முன்னுரிமை
மலேசிய இந்திய முஸ்லிம் சமூகத்தில் பல திறமையான இளைஞர்கள் இருந்தாலும், அவர்களின் கனவுகளுக்கும் வெற்றிக்கும் இடையில் முக்கியமான தடையாக இருப்பது வாய்ப்புக்கான அணுகல் என்று கூறிய ஷாகுல்,

சில மாணவர்களுக்கு பல்கலைக்கழகக் கட்டணம் செலுத்துவதற்கான வசதி இல்லை, தங்குமிட வசதி தேவைப்படுகிறது. உணவு, அன்றாடச் செலவுகளுக்குத் துணை தேவைப்படுகிறது
கல்வி ஆவணங்கள், விண்ணப்ப செயல்முறைகளில் உதவி தேவைப்படுகிறது.

இந்த இடைவெளிகளை நிரப்புவதே MFLS திட்டத்தின் நோக்கம் என தனது உரையில் அவர் விளக்கினார்.

Mukmin அமைப்பு சமீபத்தில் Indian Muslim Transformation Framework 2030 என்ற ஐந்தாண்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டம் கல்வி, தொழில்முனைவோர் வளர்ச்சியை சமூக முன்னேற்றத்தின் இரண்டு முக்கிய தூண்களாகக் கருதுகிறது.

இந்தத் திட்டத்தின் நோக்கங்கள்:
அதிகமான இந்திய முஸ்லிம் மருத்துவர்களை உருவாக்குதல்.
வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் மற்றும் கணக்காளர்களை உருவாக்குதல்.
கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை வளர்த்தல்.
தொழில்நுட்ப நிபுணர்கள், புதுமையாளர்களை உருவாக்குதல்.
தொழில்முனைவோர்களையும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தலைவர்களையும் உருவாக்குதல்.
“பட்டதாரிகளை மட்டும் உருவாக்காமல், மேலும் பல பட்டதாரிகளை உருவாக்கும் தலைவர்களை உருவாக்க வேண்டும்” என்பதே முக்மின் அமைப்பின் முகக்கியமான நோக்கம் என்று டத்தோ ஷாகுல் கூறினார்.

சமூகத்தின் பொருளாதார பங்களிப்பு
மலேசிய இந்திய முஸ்லிம் சமூகம் நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது என தனது உரையில் அவர் கூறினார்.

Mukmin அமைப்பு தொடங்கப்பட்டு சுமார் 110 நாட்களே ஆனாலும், குறுகிய காலத்தில் பல முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக டத்தோ ஷாகுல் தம் உரையில் குறிப்பிட்டார்.

அவற்றில் முக்கியமானவை:
சுமார் 80 மாணவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான கல்விப் பயணத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

முதல் 10 மாணவர்களுக்கு பிரதமர் முன்னிலையில் பல்கலைக்கழக சேர்க்கை வழங்கப்பட்டது
சுமார் 60 முதல் 70 மாணவர்கள் இந்நிகழ்வின் மூலம் உதவி பெறுகின்றனர்
மாணவர்களுக்கு RM1,000 முதல் RM30,000 வரை ஆதரவு வழங்கப்படுகிறது
சில மாணவர்களுக்கு முழுமையான கல்வி உதவி வழங்கப்படுகிறது
இந்த முன்னேற்றங்கள் அனைத்தும் Mukmin அமைப்பு தொடங்கிய குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டவை என பெருமையுடன் கூறுவதாக அவர் கூறினார்.

பல்கலைக்கழகங்களின் ஆதரவு
பல பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் MFLS திட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளன.

Management and Science University – MSU
Binary University
UNITAR Education Group
BAC Education
SG Academy
Universiti Cyberjaya
பல தொழில்நுட்ப, தொழிற்பயிற்சி நிறுவனங்கள்
சில நிறுவனங்கள் 100% உதவித்தொகை வழங்கியுள்ளன.

சில நிறுவனங்கள் 50% அல்லது 30% கல்வி உதவியை வழங்கியுள்ளன. கிடைத்த ஒவ்வொரு உதவியும் மாணவர்களின் கல்விச் செலவு இடைவெளியை நிரப்புவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக டத்தோ ஷாகுல் குறிப்பிட்டார்.

MFLS திட்டத்தின் கீழ் Adopt to Graduate என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல தொழில்முனைவோர் மாணவர்களின் கல்வியை ஆதரிக்க முன்வந்துள்ளனர்.
சுமார் 50 தொழில்முனைவோர் மாணவர்களை ஆதரிக்க முன்வந்துள்ளனர்.

ஒவ்வொருவரும் RM10,000 முதல் RM100,000 வரை நிதி உதவி வழங்கியுள்ளனர்.

இந்த நிதி மாணவர்களின் கல்வி, தங்குமிடம், உணவு மற்றும் பிற செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

பல்கலைக்கழகங்களால் முழுமையாக வழங்க முடியாத உதவியை நன்கொடையாளர்களின் உதவியுடன் நிரப்புவதே இம்முயற்சியின் நோக்கம்.

MFLS திட்டம் மாணவர்களுக்கு கல்விக் கட்டண உதவி மட்டும் வழங்குவதில்லை. தேவைக்கு ஏற்ப பின்வரும் ஆதரவுகளும் வழங்கப்படுகின்றன:
பல்கலைக்கழகக் கட்டணம்
தங்குமிடச் செலவு
உணவு, அன்றாட வாழ்க்கைச் செலவுகள்
செமஸ்டர் தொடர்பான செலவுகள்
கல்வி ஆவணங்கள் மற்றும் நிர்வாக உதவி
பல்கலைக்கழக இணைப்பு மற்றும் சேர்க்கை செயல்முறை
மாணவர், குடும்ப ஆலோசனை

மாணவர்கள் பணம் திரட்டுவதில் கவலைப்படாமல் தங்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அமைப்பின் நோக்கம் என்று ஷாகுல் கூறினார்.

இந்த உதவித்தொகை முயற்சியின் சிந்தனை, திட்டமிடலில் Fikra என்ற சிந்தனைக் குழு முக்கியப் பங்காற்றியுள்ளது. இந்தக் குழு பெண்களால் வழிநடத்தப்பட்டு நிர்வகிக்கப்படுவதாக உரையில் குறிப்பிடப்பட்டது.

<p>குழுவின் பணிகளில்:<br />
மாணவர் விண்ணப்பங்களை ஆய்வு செய்தல்<br />
தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுத்தல்<br />
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் தொடர்புகொள்வது  என்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நேரத்தில் PTPTN தலைமை நிர்வாக அதிகாரி,&nbsp; குழு வழங்கிய ஆதரவிற்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக டத்தோ ஷாகுல் வீரா தாவுத் தனது உரையில் கூறினார்.

இன்னும் உதவி தேவைப்படும் மாணவர்கள்
சுமார் 70 மாணவர்கள் உதவி பெறும் நிலையில் இருந்தாலும், மேலும் 50 மாணவர்களின் விண்ணப்பங்களை நிதி பற்றாக்குறையால் ஏற்க முடியவில்லை என டத்தோ ஷாகுல் வருத்தத்துடன் கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்காக இரவு பகல் பாராமல் உழைத்த முக்மின் குடும்பத்தினருக்கு அவர் நன்றி தெரிவித்துக்.கொண்டார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset