நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

MFLS உதவித்தொகை பெறும் மாணவர்கள், தாங்கள் வெற்றி பெற்ற பிறகு, இளைய தலைமுறைக்கும் உதவி செய்ய வேண்டும்: உயர் கல்வி அமைச்சின் தலைமை இயக்குனர் டாக்டர் அஸ்லிண்டா

சைபர்ஜெயா:

முக்மின் அமைப்பின் Fiture Leaders Scholaship (MFLS) எதிர்காலத் தலைவர்கள் உதவித்தொகை முயற்சி பாராட்டுதலுக்குரியது என்று உயர் கல்வி அமைச்சின் தலைமை இயக்குனர் டாக்டர் அஸ்லிண்டா பிந்தி அஸ்மான் கூறினார்

இந்த உதவித்தொகை, திறமையான மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கும் முக்கிய முயற்சியாகும்.

மாணவர்களுக்கு நிதியுதவி மட்டுமல்லாமல், வழிகாட்டுதல், தலைமைத்துவப் பயிற்சி, சமூகப் பங்களிப்பு, தொழில்துறை அனுபவம், தொழில்முறை வளர்ச்சி ஆகியவற்றையும் வழங்க வேண்டும் என்று தனது வலியுறுத்தினார்.

கல்வி நிறுவனங்கள், தொழில்துறை, குடும்பங்கள், சமூக அமைப்புகள் இணைந்து எதிர்காலத் திறமைகளை வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உதவித்தொகை என்பது ஒரு வாய்ப்பாக மட்டுமல்ல; அது மாணவர்களின் பொறுப்பும் ஆகும். அவர்கள் கடினமாகப் படித்து, திறன்களையும் நல்ல குணநலன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நண்பர்களுடன் பழகுதல், பல்வேறு சங்கங்கள், விளையாட்டு, சமூக நடவடிக்கைகளில் கலந்துகொள்வது மூலம் முழுமையான மாணவர்களாக வளர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மாணவர்கள் தங்கள் குடும்பத்தை மறக்காமல், பெற்றோர்கள் பெருமைப்படும் வகையில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். 

மலேசியாவின் தனியார் பல்கலைக்கழகங்களும் தரமானவை என்றும் அரசு, தனியார் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் உயர்கல்வி அமைச்சகத்தின் மேற்பார்வையில் செயல்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

MFLS உதவித்தொகை பெறும் மாணவர்கள், தாங்கள் வெற்றி பெற்ற பிறகு, தங்களுக்கு கிடைத்த வாய்ப்பைப் போலவே இளைய தலைமுறைக்கும் உதவி செய்து பங்களிக்க வேண்டும் என அவர் கூறினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset