செய்திகள் மலேசியா
நஜிப்பின் பொது மன்னிப்பு விவகாரம்: கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் நாளை விவாதிக்கும்?
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் மன்னிப்புக் கோரிக்கை குறித்து விவாதிக்க, கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் நாளை கூடுகிறது.
முந்தைய கூட்டத்தில் நஜிப்பின் விண்ணப்பத்தை வாரியம் ஒத்திவைத்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது ஒரு அரிதான நிகழ்வு.
எதிர்பாராதவிதமாக, வாரியம் தனது நிகழ்ச்சி நிரலில் ஒரே ஒரு விஷயத்துடன் மற்றொரு கூட்டத்தை நடத்தவுள்ளது.
இதில் ஏதோ ஒரு விதமான தலையீடு இருப்பதாக நான் நினைக்கிறேன்.என்று ஓர் அதிகாரப்பூர்வ வட்டாரம் கூறியுள்ளது.
முந்தைய அறிக்கைகளின்படி, செப்டம்பர் 11 அன்று நடைபெறும் மன்னிப்பு வாரியக் கூட்டத்தில், மற்ற விஷயங்களுடன் நஜிப்பின் கருணை மனுவும் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிதியிலிருந்து 42 மில்லியன் ரிங்கிட்டை கையாடல் செய்த குற்றத்திற்காக, 73 வயதான நஜிப்பிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2026, 10:56 pm
டாவ்லாட் துவாங்கு, துரோகிகளைப் பிடியுங்கள் என்ற கோஷங்களுடன் துவாங்கு முஹ்ரிஸை வரவேற்க 100 பேர் கேஎல்ஐஏவில் கூடினர்
September 17, 2026, 10:55 pm
அரசாங்கம் மின்சார மானியப் பாதுகாப்பு அளவை ஒரு யூனிட் மின்சாரம் 600லிருந்து 800ஆக உயர்த்துகிறது
September 17, 2026, 10:54 pm
கும்பல் முறியடிப்பு; 35 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல்: ஹுசைன் ஒமார் கான்
September 17, 2026, 9:50 pm
எப்ஏஎம் தலைவராக டத்தோ அப்துல் கனி தேர்வு: டத்தோ சேரன் உதவித் தலைவரானார்
September 17, 2026, 5:48 pm
சிலாங்கூர் சிறுவர் பாடல் திறன் போட்டி; சிறுவர்களின் திறனை வெளிப்படுத்த மேடை அமைத்து தரும்: டாக்டர் குணராஜ்
September 17, 2026, 4:15 pm
டத்தின்ஶ்ரீ ரொஸ்மா மன்சோர் ஊழல் வழக்கு: கூடுதல் சாட்சியப் பதிவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை
September 17, 2026, 12:49 pm
